புதன், நவம்பர் 16, 2011

மில்லி கவுன்சில் பொருளாளர் மவ்ஜி கான் மரணம்

புதுடெல்லி:ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் பொருளாளர் மவ்ஜி கான் மரணமடைந்தார். இதய அதிர்ச்சியை தொடர்ந்து திங்கள் கிழமை இரவு எட்டு மணிக்கு ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. அவருக்கு வயது 72 ஆகும். அவரது உடல் சொந்த கிராமமான உ.பியின் பாத்பத் மாவட்டத்தில் ரமலாவில் அடக்கம் செய்யப்படுகிறது.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மவ்ஜி கான் தனது முயற்சியால் போலீஸில் கான்ஸ்டபிளாக சேர்ந்தார். பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று டெல்லியில் உதவி கமிஷனராக பணியாற்றினார். பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு முஸ்லிம்களிடையே கல்வி-சமூக முன்னேற்ற பணிகளில் ஈடுபட்டார்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் ஆகியோர் டெல்லியில் அவரது வீட்டிற்கு சென்று அனுதாபம் தெரிவித்தனர். மவ்ஜி கானுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக