ஈரானின் நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் போலியான செய்திகளையும், வீடியோக்களையும் பி.பி.சி வழியாக பிரசுரித்ததற்கு ஒரு பெண் உள்பட 6 பேர் கடந்த செப்டம்பரில் கைதுச்செய்யப்பட்டனர்.இதனைத்தொடர்ந்து, பி.பி.சியுடன் ஒத்துழைக்க கூடாது என ஈரான் குடிமக்களுக்கு அரசு உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சிதான் ஃபாத்தியின் கைது.மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து ஈரானை தாக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் வேளையில் ஈரான் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இச்சம்பவம் மூலமாக நாட்டில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்படும் என கருதப்படுகிறது.ஈரானுக்கு எதிரான செய்திகளை வெளியிட நாட்டின் குடிமக்களுக்கு பி.பி.சி பெருமளவில் பண உதவிச்செய்வதாக டெஹ்ரான் டைம்ஸ் கூறுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக