புதன், மார்ச் 12, 2014

கேண்டிடேட்ஸ் செஸ்: ஆனந்த் சாதிப்பாரா?

ரஷியாவில் உள்ள கான்ட்டி மான்சிஸ்க் நகரில் நாளை முதல் 31–ந்தேதி வரை கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி நடக்கிறது. 

இந்திய கிராண்ட்மாஸ்டரும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் கிராம்னிக், டிமிட்ரி, சுவிட்லர், செர்ஜி (ரஷியா) தபோலோவ் (பல்கேரியா), மேம்டியரோவ் (அசர்பைஜான்), அரோனியன் (அர்மேனியா) ஆகிய 8 வீரர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.


இந்தப்போட்டியில் வெற்றி பெறுவர் உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்செனுடன் உலக செஸ் சாம்பியன் போட்டியில் மோதுவார். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த உலக போட்டியில் ஆனந்த் நார்வே வீரர் கார்ல்செனிடம் தோற்றார். இதனால் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் அவர் சாதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்போட்டி டபுள் ரவுண்ட் ராபின் முறையில் 14 சுற்றுகளாக நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக