பனிச்சருக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கிய பிரபல கார்பந்தய வீரரான மைக்கேல் சூமாக்கரின் தலைப்பகுதி பாறையின் மீது மோதியதால் பலத்த காயமேற்பட்டது. இதன் காரணமாக கோமா நிலைக்கு அவர் செல்லும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து அவரது செய்தி தொடர்பாளரான சபைன் கெம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட நாளாக அவர் கோமா நிலையில் இருந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலையில் நம்பிக்கை தரும் சிறு முன்னேற்றம் காணப்படுவதாக கூறியுள்ளார். எனினும் பொறுமையாக இருக்க வேண்டிய தருணமிது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சூமாக்கர் கோமாவிலிருந்து மீண்டு கண்டிப்பாக எழுந்து நடப்பார் என்று நம்புவதாகவும், முழுமையாக குணமடைய இன்னும் நீண்ட காலமாகும் எனவும் கெம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக