கவுதம் மேனனிடம் உதவியாளராக இருந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது இயக்கத்தில் உருவான படம் 49 -ஒ இதில் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்த படம். உடல்நலக் குறைவு காரணமாக சில காலம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைக்களத்தைக் கொண்டது. இந்த திரைபடம் அடுத்த மாதம் ஏப்ரலில் வர இருக்கிறது.
கவுதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படம் இல்லை இது ஒரு நகைச்சுவை கொண்ட பொழுபோக்கு கொண்ட படம்.
இந்த படத்தின் கரு தற்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் வைத்து இந்த படம் எடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். கவுண்டமணி இந்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார் .இந்த படம் விவசாயிகள் நலன் கருதி எடுக்கபட்ட படம் ஆகும்.
இந்த படத்தில் விடிவி.கணேஷ் மற்றும் ஆரண்ய காண்டம் புகழ் சோமசுந்தரம்,சத்தியன் போன்ற நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள் என்று இயக்குநர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக