புதன், மார்ச் 12, 2014

ஆம் ஆத்மி கட்சியின் 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு


ஆம் ஆத்மி கட்சியின் 5-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 56 வேட்பாளர்கள் கொண்ட இந்த பட்டியலில், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சுரேஷ் கோபடே இடம் பெற்றுள்ளார். இவர் மகாராஷ்டிர மாநிலம் பாரமதி தொகுதியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து போட்டியிடுகிறார்.


ஆம் ஆத்மி சார்பில் இதுவரை மொத்தம் 187 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக திங்கட்கிழமை வெளியிட்ட பட்டியலில் பத்திரிகையாளர் ஆஷிஷ் கேதன், காமெடி நடிகர் பகவந்த் மான் ஆகியோர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக