புதன், மார்ச் 12, 2014

ஆலங்கட்டி மழையால் 90000 ஹெக்டேர் பயிர்கள் நாசம்

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த பதினைந்து நாளாக பெய்து வரும் கடுமையான ஆலங்கட்டி மழையினால் யாவத்மால் மாவட்டத்தில் மட்டும் 90 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் அழிந்துவிட்டன.

“இதுவரை 87881 ஹெக்டேர் பரப்பளவிலான கோதுமை மற்றும் பருப்பு பயிர்கள் மற்றும் 1036 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி பயிர்கள் நாசமடைந்துள்ளன. 882 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பழவகைகளும் இம்மழையினால் கடுமையாக சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக புசத் பகுதியில் 22000 ஹெக்டேர் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்று அம்மாவட்ட வேளாண்துறை அதிகாரி டி.ஐ.கெய்க்வாட் தெரிவித்தார்.

இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அஷ்வின் மட்கல் கூறுகையில், “இம்மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாக்களும் ஆலங்கட்டி மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி விவசாய மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்குவது மாநில அரசின் கடமை என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக