ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று காலை மும்பை வந்தார்.
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அவர், நேராக வாசலில் நின்றிருந்த ஆட்டோவில் ஏறி, அந்தேரி ரெயில் நிலையம் சென்றார். கெஜ்ரிவால் ஆட்டோவில் செல்லும் காட்சியை பலர் தங்களது செல்போனில் படம் பிடிக்க முயற்சித்ததால் சாலையில் கூட்டம் கூடியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
அந்தேரி ரெயில் நிலையத்தில் கூடியிருந்த ஏராளமான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் அங்கு பொதுமக்களை சோதனை செய்ய வைக்கப்பட்ட மெட்டல் டிடெக்டரை அடித்து நொறுக்கினர். இந்த களேபரங்களுக்கிடையே அந்தேரி ரெயில் நிலையத்திலிருந்து சர்ச் பார்க் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணச்சீட்டை வாங்கிய கெஜ்ரிவால் மின்சார ரெயிலின் பொது வகுப்பு பெட்டியில் பயணம் செய்து பொதுமக்களை ஆச்சரியப்படுத்தினார். ஆனால் ஆம் ஆத்மி கட்சியினரின் செயல்பாட்டை பார்த்து பொது மக்கள் முகம் சுளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக