புதன், மார்ச் 12, 2014

நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ 40 கட்சி தொகுதிகளில் தனித்துப்போட்டி


 
நாடு முழுவதும்  40 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ.,தனித்துப்போட்டியிடுகிறது

ராமநாதபுரம் லோக்சபா தொகுதி "சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா'(எஸ்.டி.பி.ஐ.,) கட்சி வேட்பாளர் நூர் ஜியாவுதீன் அறிமுக கூட்டத்தில்

 மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கூறியதாவது:வரும் லோக்சபா தொகுதியில் முதன் முறையாக தமிழகத்தில் 3  தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறோம். தமிழக பிரச்னையை வலியுறுத்தி மார்ச் 15ல், தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம். 


மீனவர்கள், இலங்கை தமிழர்கள், கூடங்குளம் அணுமின் உலை, காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு போன்ற தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்னைகளை முன்னிறுத்தி போராடி வருகிறோம். ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் எங்கள் கட்சியில், 3 லட்சத்து 15 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக