நாங்கள் போர் நடத்தியது, விடுதலைப்புலிகளுடன்தான், தமிழர்களுடன் அல்ல.
தென்பகுதியில், சிங்களர்களிடையே தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்
என்று ராஜபக்சே கூறினார்.
ஐ.நா. தீர்மானம்
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இலங்கை இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீது, 2 வாரத்தில் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இலங்கை அரசுக்கு இவ்விவகாரம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அதிபர் ராஜபக்சே கட்சியை சேர்ந்தவரும், முந்தைய அதிபருமான சந்திரிகா, ராஜபக்சேவுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கேவை அவர் சந்தித்து பேசினார். மத சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இதுவும், ராஜபக்சேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில், இலங்கையின் தென்பகுதியில் உள்ள கல்லே மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் ராஜபக்சே பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:–
நாங்கள் நடத்திய போர், தமிழர்களுக்கு எதிரானது அல்ல. கொடிய பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே போர் நடத்தினோம். தமிழர்களுக்கு எதிராக நாங்கள் போர் நடத்தி இருந்தால், நாட்டின் தென்பகுதியில் சிங்களர்களிடையே தமிழர்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்திருக்க முடியுமா?
மத நல்லிணக்கம்
மேலும், வெளிநாட்டு உதவியுடன் செயல்படும் சில அரசு சார்பற்ற அமைப்புகள், நாட்டில் மத மோதல்கள் நடப்பது போல காட்ட முயற்சிப்பதை நான் அறிவேன். உண்மையில், நாடு முழுவதும் மத நல்லிணக்கம் நிலவி வருகிறது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடக்கும் நேரத்தில் அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்துவதற்காகவே, இத்தகைய வேலைகளில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவ்வாறு ராஜபக்சே பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக