பெங்களூருவில் திருமண
வரவேற்பு நிகழ்ச்சியில் மட்டன் பிரியாணி தான் வேண்டுமென மாப்பிள்ளை
வீட்டார் அடம்பிடித்ததால் அந்த திருமணமே நிறுத்தப்பட்ட சம்பவம்
நடந்துள்ளது.
பெங்களூருவில் உள்ள தன்னேரி பகுதியை சேர்ந்தவர்களான யாஸ்மின் தாஜ் மற்றும் சைபுல்லா ஆகியோருக்கு பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 11 ஆம் தேதி ப்ரசெர் டவுனின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்காக பெண் வீட்டார் 30 கிலோ சிக்கன் பிரியாணி வாங்கியிருந்தனர்.
ஆனால், தங்களுக்கு கண்டிப்பாக மட்டன் பிரியாணிதான் வேண்டுமென்று கேட்ட மாப்பிள்ளை வீட்டார் புதிதாக மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து அனைவருக்கும் பரிமாறும்படி பெண் வீட்டாரை வற்புறுத்தியதாக தெரிகிறது.
இரு வீட்டாரிடையும் வாக்குவாதம் உச்ச கட்டத்தை அடைய, இந்த திருமணமே நிறுத்தப்பட்டது.
இது குறித்து தெரவித்த பெண் வீட்டார், இந்த விஷயத்திலேயே இவ்வளவு பிடிவாதம் காட்டும் மாப்பிள்ளை வீட்டாருடன் எங்களது மகள் எவ்வாறு நிம்மதியாக வாழ முடியுமென கேள்வி எழுப்பியாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக