நேற்றைய தகவலின்படி ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம், மலாய் தீபகற்பத்துக்கும், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே சுமார் 805 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியாகியது. இந்த தகவலின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்து துறை, விமான தேடல் குழு, மீட்பு குழு ஆராய்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து அந்தமான் கடல் பகுதி வரையில் விமானத்தை தேடும் பணி விஸ்தரிக்கப்பட்டது. இந்நிலையில் மாயமான விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டுக்கு அறையுடன் தொடர்பில் இருந்த பைலெட் இறுதியாக 'ஆல் ரைட், குட் நைட்' என்று கூறியுள்ளார். விமானம் ரேடார் தொடர்பை இழந்ததற்கு முன்னர் விமானத்தில் இருந்து கடைசியாக கிடைத்த தகவல் இது தான் என்று கோலால்பூர் விமான கட்டுபாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானியின் படமும் வெளியிடப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக