இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ராஜ்ய உறவுகள் கடுமையாகப் பாதித்தன. இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் தேவயானிக்கு முழுமையான சட்ட விலக்கு பாதுகாப்பு கிடைக்கத்தக்க விதத்தில் அவர் ஐ.நா.வில் இந்திய நிரந்தர தூதுக்குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா இடையேயான தலைமையக உடன்படிக்கை பிரிவு 15–ன்படி சிறப்பு சலுகைகளும், விலக்கு உரிமைகளும் கடந்த ஜனவரி 8–ந்தேதி வழங்கப்பட்டன. அதே நேரத்தில், தேவயானிக்கு வழங்கப்பட்ட விலக்கு உரிமையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா கேட்டுக்கொண்டது. ஆனால் இந்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்து விட்டது.
இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக, தேவயானி மீது நியூயார்க் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் தேவயானி, தாய்நாடு திரும்பவும் உத்தரவிடப்பட்டது. அவர் நாடு திரும்பினாலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அப்படியே நிலுவையில் இருக்கும் என்று அமெரிக்க அரசு வக்கீல் பிரீத் பராரா தெரிவித்தார்.
குற்றச்சாட்டு பதிவு செய்த நிலையில், நாடு திரும்பும்படி அமெரிக்கா கூறி விட்டதால், தேவயானி நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினார். இந்நிலையில் அமெரிக்க கோர்ட்டு தேவயானி தேவயானி கோப்ரகடே மீதனா வழக்கை ரத்து செய்துள்ளது. அமெரிக்க கோர்ட்டு தனது 14 பக்க உத்தரவை வெளியிட்டுள்ளது. தேவயானி ஜனவரி 8ம் தேதி முழு இராஜதந்திர பாதுகாப்பை பெற்றிருந்தார் என்பதை மறுக்க முடியாது என்று கோர்ட்டு கூறியுள்ளது. தேவயானி சொந்த நாட்டுக்கு திரும்பும் போதும் ஜனவரி 9ம் தேதியும் பாதுகாப்பை பெற்றிருந்தார் என்று கோர்ட்டு கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக