கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயர் சமீபத்தில்
ஜாமீனில் விடுதலை ஆனார். அவர் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.
அப்துல்லா குட்டி மீது திருவனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு
புகார் கூறினார்.
புகாரில் 'சோலார் பேனல் தொழில் சம்பந்தமாக பேச வேண்டும் என்று கூறி என்னை அப்துல்லா குட்டி நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்தார். அங்கு சென்ற என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
'செக்ஸ்' புகாரில் சிக்கிய அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் அந்த கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கண்ணூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார். இதுபற்றி அறிந்த கண்ணூர் மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் பிஜூ, 25–க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் அந்த ஓட்டலுக்கு சென்றார்.
பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் போலீசாரை தள்ளிவிட்டு விட்டு உள்ளே நுழைந்த அவர்கள் அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ.வை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினார்கள். அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அப்துல்லா குட்டி கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினர். இருந்தாலும் தொடர்ந்து அடி–உதை விழுந்தது.
இதை தடுக்க வந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களும் தாக்கப்பட்டனர்.
நிலைமை விபரீதமானதை உணர்ந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதிரடிப்படை போலீசாரை அங்கு வர வழைத்தனர். அவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது தடியடி நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இதனால் நட்சத்திர ஓட்டலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு போலீசார் அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ.வை பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
எம்.எல்.ஏ. மீதான தாக்குதல் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கண்ணூர் மாவட்ட செயலாளர் ஜெயராஜன் கூறும்போது 'அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும். போலீசார் அவரை கைது செய்ய வேண்டும்' என்றார்.
காங்கிரஸ் எம்.பி. சுதாகரன் கூறுகையில் 'அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. மீதான புகார் உண்மையென நிரூபிக்கப்பட்டால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும். அந்த பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக