மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந்தேதி மாயமானது. விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உள்பட 239 பேரும் பலியாகி விட்டனர் என நம்பப்படுகிறது.
மாயமான விமானம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. விமானத்தை தேடும் பணியில் சீனா, அமெரிக்கா மற்றும் மலேசிய நாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. நேற்றைய தகவலின்படி ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம், மலாய் தீபகற்பத்துக்கும், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே சுமார் 805 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியாகியது. பின்னர் மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமானம் மாயமானது குறித்து உண்மையான தகவல்களை தெரிவியுங்கள் என்று விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள், பீஜிங்கில் மலேசிய மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு தங்களது கோபத்தை வெளிபடுத்தியுள்ளனர். பீஜிங்கில் ஓட்டல் ஒன்றில் மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களை சந்தித்து பேசிய போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர்கள் ஏன் மலேசிய ராணுவம் தங்களுக்கு தெரிந்த ரகசியத்தை வெளிபடுத்தாமல் உள்ளனர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக