செவ்வாய், மார்ச் 11, 2014

தண்டவாளத்தில் விரிசல்: உயிரை பனையவைத்து பல உயிர்களை காப்பாற்றிய வீர மங்கை


திருவனந்தபுரம் அருகே உள்ள களக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பீவி (வயது 55). இவரது வீடு அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ளது.

நேற்று காலை 6.30 மணி அளவில் தனது வீட்டு பக்கத்தில் இருந்த தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதால் ஜமீலா பீவி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இந்த வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றபோது தான் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு பெரிய சத்தம் கேட்டு உள்ளது. அடுத்தடுத்து இந்த தண்டவாளம் வழியாக ரெயில்கள் வரும் என்பதால் ஜமீலா பீவி பதறியடைந்து கொண்டு குடியிருப்பு பகுதிக்கு ஓடினார். அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு வாலிபரிடம் இதுபற்றி தெரிவித்த ஜமீலா பீவி அவரிடம் சிவப்பு துணியை எடுத்து வரும்படி கூறினார்.



அதன்படி சிவப்பு துணியுடன் வந்த அந்த வாலிபர் தண்டவாளத்தில் ஓடி சென்று அந்த வழியாக வந்த மங்களாபுரம் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரியவிபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்திற்கு தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் பற்றி தகவல் கொடுக்கப்பட்டது.

ரெயில்வே அதிகாரிகள் அருகில் உள்ள மற்ற ரெயில் நிலையங்களுக்கு இந்த தகவலை தெரிவித்து அந்த வழியாக வந்த ரெயில்களை ஆங்காங்கே நிறுத்த ஏற்பாடு செய்தனர். மேலும் ரெயில்வே ஊழியர்கள் விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தண்டவாளத்தை சீரமைத்தனர்.

இதன் பிறகு ஒரு மணி நேரம் தாமதமாக அந்த வழியாக ரெயில்கள் சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக