சத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினர் மீது நகசலைட்டுகள் நடத்திய தாக்குதல் தேர்தல் புறக்கணிப்புக்காக நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரியவந்துள்ளது. அதேபோல், பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும் நக்சலைட்டுகள் குறிவைத்து திட்டமிட்டுள்ளனர்.
நக்சலைட்டுகளின் இந்த சதித்திட்டம் குறித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே உள்துறை அமைச்சகம், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 9 மாநிலங்களில் உள்ள தலைமை செயலாளர்களுக்கும் டிஜிபிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையின் போது மாவோயிஸ்டுகள் சதிதிட்டம் தீட்டிய முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அதில், வரும் பாரளுமன்ற தேர்தலை சீர்குலைக்க நக்சலைட்டுகள் திட்டம் வகுத்துள்ளதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.மேலும், காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சி தலைவர்களையும் நக்சலைட்டுகள் குறிவைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக