புதன், மார்ச் 12, 2014

மே 12-ஆம் தேதிக்கு பிறகு அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும்: ஐபில் நிர்வாகம்


இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த போட்டி ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியாவில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும், பாராளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் வருவதால் , தேர்தல் முடியும் வரை ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்து விட்டது.


இதனால் 7–வது ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது, எந்த தேதியில் நடத்துவது என்பதை முடிவு செய்ய முடியாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் இருந்தது.   இந்நிலையில், 7 வது ஐபில் கிரிக்கெட் போட்டி தொடர் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை நடக்கிறது என்று ஐபில் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 30 வரையிலான போட்டிகள்  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்றும் மே-1 முதல் மே 12 ஆம் தேதி வரையிலான இரண்டம் பகுதி ஆட்டங்கள் இந்தியா அல்லது வங்கதேசத்தில் நடைபெறும் என்றும்  மே 12 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து ஆட்டங்களும் இந்தியாவில் நடைபெறும் என்று  ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக