சனி, மார்ச் 21, 2015

ஐஏஎஸ் அதிகாரி தற்கொலை விவகாரம், சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல்

கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி தற்கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மாநில முதல்வர் சித்தராமையாவிடம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான அரசின் முடிவை, நாளை மறுதினம் சட்டப்பேரவையில் சித்தராமையா தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் சித்தராமையா நேற்று ஆளுநர் வஜூபாய்வாலாவை சந்தித்து ஐஏஎஸ் அதிகாரி மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து எடுத்து கூறினார். 

இதனிடையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செய லாளர் அகமது படேல், கர்நாடக பொறுப்பாளர் திக்விஜய்சிங் ஆகியோர் சித்தராமையாவை போனில் தொடர்பு கொண்டு, இவ்வழக்கை சிபிஐயிடம் வழங்குமாறு சோனியா கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 இது தொடர்பாக அமைச்சர்கள் டி.கே.சிவகுமார், அம்பரீஷ் ஆகியோருடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை பேரவையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக