வெள்ளி, மார்ச் 13, 2015

எரிமலை வெடிப்பு: கோஸ்டா ரிகாவின் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது

எரிமலை வெடிப்பின் காரணமாக வளிமண்டலத்தில் பரவியுள்ள சாம்பலால் கோஸ்டா ரிகாவின் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தென் அமெரிக்கா நாடாக கோஸ்டா ரிகாவின் தலைநகர் சான் ஜோஸ் அருகில் இருக்கும் துர்ரியல்ப் எரிமலை நேற்று இரவு முதல் குமுற தொடங்கி புகை மற்றும் சாம்பலை கக்கி வருகிறது. இந்த சாம்பல் வளமண்டலத்தில் பரவி உள்ளது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து 50 மைல் தொலைவில் இருக்கும் விமான நிலையத்திற்கு வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

கடந்த அக்டோபர் மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் வளிமண்டலத்தில் புகை மற்றும் சாம்பல் பரவி கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுதான் கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக