ஞாயிறு, மார்ச் 08, 2015

குஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்தது

நாடெங்கும் வேகமாக பரவிவரும் பன்றிக் காய்ச்சலுக்கு குஜராத்தில் இன்று மேலும் 8 பேர் பலியானதையடுத்து மாநிலம் முழுவதும் இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. 

எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை இந்நோயால் பாதிக்கப்பட்ட 4004 நோயாளிகள் சிகிச்சைக்கு பின் குணமடந்துள்ளதாகவும், இன்றைய நிலவரப்படி 110 புதிய நோயாளிகளுடன் சேர்த்து 5521 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் குஜராத் மாநில சுகாதார துறை இன்று தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், பன்றிக் காய்ச்சலுக்கு பயந்து அகமதாபாத் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 5 நாள் விடுமுறையில் சுற்றுலா சென்ற சுமார் 10 ஆயிரம் வக்கீல்கள் வரும் திங்கட்கிழமையில் இருந்து (9-ம் தேதி) தங்களது பணிகளை தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக