வியாழன், மார்ச் 13, 2014

எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் முன்பு வெடிகுண்டு தாக்குதல்


எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேல் தூதரகத்தின் முன்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதிருஷ்டவசமாக  இந்த தாக்குதலில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.


தூதரகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் வாகனத்தை குறி வைத்து  இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட தூதரக கட்டடம்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டதால் விபத்து நிகழ்ந்த நேரத்தில் கட்டடத்தில் யாரும் இல்லை. இந்த தகவலை  அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக