அமெரிக்காவில் அறிவியலில் சிறந்து விளங்குகிற மாணவர்களை தேர்வு செய்து இன்டெல் அறிவியல் திறன் கண்டறிவு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அந்த விருது வென்ற 10 மாணவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் ஆவார்கள். ஜார்ஜியாவை சேர்ந்த மாணவர் ஆனந்த் சீனிவாசன் விருது பட்டியலில் 8–வது இடத்தைப் பிடித்தார். 10–வது இடத்தை மேரிலாண்டை சேர்ந்த ஷாவுன் தத்தா கைப்பற்றினார். இந்த மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.12 லட்சம்) பரிசு வழங்கப்பட்டது. இரு மாணவர்களும் கணினி அறிவியல் துறையில் சாதனை படைத்துள்ளனர்.
சாண்டீகோவை சேர்ந்த அமெரிக்க மாணவர் எரிச் சென் விருதுப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். இந்த மாணவருக்கு ஒரு லட்சம் டாலர் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக