வெள்ளி, மார்ச் 14, 2014

ரயில் வேகத்திற்கேற்ப பறக்கும் விளம்பர பலகை அழகியின் கூந்தல்

ஸ்வீடனில் உள்ள ஒரு ரயில் நிலைய நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் இளம்பெண்ணின் தலைமுடி ரயிலின் வேகத்திற்கேற்ப பறந்தது அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது.


ஸ்டோக்ஹோல்மில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் விளம்பர பலகையில் உள்ள இளம்பெண்ணின் தலைமுடி அங்கு வரும் ரயிலின் வேகம் மற்றும் திசைக்கு ஏற்ப பறக்கிறது.
பின்னர், ரயில் சென்றதும் அப்பெண் தலை தலைமுடியை சிரித்துக்கொண்டே சரி செய்துக்கொள்கிறார். இது ஒரு தலைமுடி எண்ணெய்க்கான விளம்பரம். முதல் முதலாக இந்த விளம்பரத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்ந்தனர்.


இந்த விளம்பரத்தை மக்களின் மனதில் பதியவைக்க, ரயில் வரும் ஓசை கேட்டால் இயங்குவது போல சென்சார் பயன்படுத்தி விளம்பர பலகையை வடிவமைத்துள்ளனர்.

அதன்படி, ரயில் நிலையத்திற்குள் வேகமாக நுழைந்ததும், விளம்பரத்தில் உள்ள பெண்ணின் கூந்தல் பறந்து, ரயில் நின்றதும் சிக்காகி நின்றுவிடுகிறது. பின்னர், அப்பெண் சாவகாசமாய் சிரித்தபடியே தனது கூந்தலை சரி செய்கிறார். இதை அடுத்து அந்த எண்ணெய்யின் விளம்பரம் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக