லோக்சபா தேர்தல் நெருங்குவதையொட்டி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், அடுத்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என அனல் பறக்கும் சூதாட்டம் தொடங்கி விட்டதாம். பரபரப்பாக மக்களால் எதிர்பார்க்கப் படுகின்ற செய்திகள் அல்லது செயல்களைப் பயன்படுத்தி காசாக்க முயற்சிப்பது தான் இந்தச் சூதாட்டக்காரர்களின் முக்கிய வேலை. அந்நவகையில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்டக்காரர்கள் பணம் சம்பாதிக்க வீரர்களை கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயித்தார்கள். நடந்து முடிந்த பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்த சூதாட்டம் பலரின் முகமூடிகளைக் கிழித்து அவர்களின் நிஜ முகத்தை உலகிற்கு அம்பலப் படுத்தியது. அந்த வகையில் சூதாட்டக்காரர்களின் பார்வை தற்போது 16வது லோக்சபா தேர்தல் மீது விழுந்துள்ளதாம். மும்பையை தலைமையிடமாக கொண்டு சூதாட்டக்காரர்கள் செயல்பட்டாலும், இவர்களுக்கு நாடு முழுவதும் தரகர்கள் உள்ளனர். அவர்கள் முக்கிய நகரங்களில் சூதாட்ட மையங்கள் அமைத்து செயல்படுகிறார்கள். குறிப்பாக நட்சத்திர ஓட்டல்கள், ரகசிய விடுதிகள் போன்ற இடங்களில் சூதாட்ட மையம் அமைத்து செயல்படுவார்களாம்
பிரதமர் சூதாட்டம்... கிரிக்கெட்டில் வெற்று பெறும் அணி மீது பணம் கட்டியது போல, லோக்சபா தேர்தலில் யார் பிரதமர் ஆவார்கள் என்ற ரீதியில் சூதாட்டம் நடைபெறுகிறதாம்.
உங்களில் யார் அடுத்த பிரதமர்... அதாவது, அடுத்த பிரதமர் யார்? மோடியா ராகுலா?, பாரதீய ஜனதாவுக்கு 200 இடம் கிடைக்குமா? 272 இடங்களை கைப்பற்றுமா? காங்கிரசுக்கு 100க்கும் குறைவான சீட்டுகள் கிடைக்கும், என பல குரூப்களாக சூதாட்டம் களை கட்டுகிறதாம்.
லாபமா... நஷ்டமா?..... இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 22 பைசாவுக்கு 1 ரூபாய் என்ற அளவில் லாபம் வழங்கப்படுமாம். அதேசமயம் அவர்கள் சொன்னது நடக்காமல் போனால், 1 ரூபாய்க்கு 22 பைசாதான் கிடைக்கும். இப்படி லட்சக்கணக்கில் விகிதாச்சாரப்படி பணம் பகிர்ந்து அளிக்கப்படுமாம்.
சூதாட்டத்திலும் காங். பலம் கம்மி தான்... இந்த சூதாட்டத்தில் பாஜக மற்றும் மோடி மீது நம்பிக்கை வைத்துதான் பெரும்பாலோர் பணம் கட்டுவதகாவும், காங்கிரஸ் மீது குறைந்த அளவு சூதாட்டக்காரர்கள் பணம் கட்டுகிறார்கள், அதுவும் தோற்கும் என்றுதான் பணம் கட்டி விளையாடுகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்மாடியோவ்!.. லோக்சபா தேர்தலைக் குறி வைத்து நடைபெறும் இந்த சூதாட்டத்தில் நாடு முழுவதும் சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி பணம் புரள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக