தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மழையால் 7 ஓவர் ஆட்டம்
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி டர்பனில் நடந்தது. மழை காரணமாக இந்த ஆட்டம் 7 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்தது. குயின்டான் டீ காக் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 41 ரன்னும், கேப்டன் டுபிளிஸ்சிஸ் 13 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 27 ரன்னும் திரட்டினர்.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 16 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் விளாசி அவுட் ஆனார். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. வெய்ன் பார்னல் வீசிய அந்த ஓவரில் பிராட் ஹாட்ஜ் தொடர்ந்து 2 சிக்சர்கள் விரட்டியடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலிய அணி 6.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராட் ஹாட்ஜ் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதலாவது ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் இன்று நடக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக