வெள்ளி, ஏப்ரல் 05, 2013

அமெரிக்கா செல்வதற்கு இனப்படுக்கொலை செய்த நரேந்திர மோடிக்கு விசா கிடைக்குமா ?

  • கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரத்தை அடுத்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா செல்ல விசா மறுக்கப்பட்டது.
  • சமீபத்தில் அந்நாட்டு பல்கலைக்கழகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நரேந்திர மோடி பேசும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதற்கு பா.ஜ., சிவசேனா உள்பட பல கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய குழு, குஜராத் வந்து மோடியை சந்தித்து பேசினர். அப்போது அவரை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தனர். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். 
  •  
  • அமெரிக்காவுக்கு செல்ல மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் அவருக்கு அமெரிக்கா செல்ல விசா தரப்படுமா என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்திடம் கேட்ட போது, ‘அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. விசாவுக்கு மோடி விண்ணப்பிக்கலாம். ஆனால், எல்லா விசாவும் தகுதியின் அடிப்படையிலேயே வழங்கப்படும். இதுபற்றி முன்னதாகவே நான் கருத்து சொல்ல முடியாது' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக