- கர்நாடக பாஜவிலிருந்து விலகுவதாக இரண்டு எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு எம்எல்சி அறிவித்துள்ளனர். எடியூரப்பா கட்சி சார்பாக வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
- கர்நாடக முதல்வராக இருந்த
எடியூரப்பா, கடந்த ஆண்டு பாஜவிலிருந்து விலகி ‘கர்நாடக ஜனதா’ என்ற புதிய
கட்சியை தொடங்கியுள்ளார். இவரது கட்சியில் இதுவரை பாஜவை சேர்ந்த 14
எம்எல்ஏக்கள் இணைந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே தங்கள் பதவியை ராஜினாமா
செய்து விட்டனர்.
இந்நிலையில் சன்னகிரி பாஜ எம்எல்ஏ மடல் விருபக்ஷப்பா, ஜகலூர் எம்எல்ஏ ராமச்சந்திரா, எம்எல்சி சிவராஜ் சாஜன் ஆகியோர் பாஜவிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளனர். எம்எல்ஏக்கள் இருவரும் சபாநாயகர் போப்பய்யாவை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். மேலவை தலைவர் சங்கரமூர்த்தியிடம் எம்எல்சியின் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது. இதில் விருபக்ஷப்பா மற்றும் சாஜன் ராஜினாமா கடிதங்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ராமச்சந்திராவின் ராஜினாமா இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ராஜினாமாவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த 3 பேரும் தொகுதி மக்கள், தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க பாஜவிலிருந்து விலகியதாக தெரிவித்தனர். வரும் தேர்தலில் தங்களது தொகுதியில் எடியூரப்பா கட்சி சார்பாக போட்டியிடப் போவதாகவும் அறிவித்தனர். இவர்களை தொடர்ந்து மேலும் சிலர் பாஜவிலிருந்து விலகி எடியூரப்பா கட்சியில் சேர திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. பாஜவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களும் எடியூரப்பா கட்சியில் சேருவதற்கான வாய்ப்பு இருப்பதாக கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது
வெள்ளி, ஏப்ரல் 05, 2013
மேலும் 2 எம்எல்ஏ ராஜினாமா கர்நாடக பாஜகாவில் சரிவு !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக