கருப்புப் பணம்: விசாரணை தொடங்கியது !

- வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி
வைத்துள்ளவர்கள் என சர்வதேச அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள
இந்தியர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கி உள்ளதாக மத்திய நிதியமைச்சர்
ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
- புது தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது அவர் தெரிவித்தது:
- இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 2.5 லட்சம் தனி நபர்கள் மற்றும்
நிறுவனங்கள் கணக்கில் காட்டப்படாத ரொக்கத்தை வெளிநாட்டு வங்கிகளில்
பதுக்கி வைத்திருப்பதாக சர்வதேச ஊடக அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
- கருப்புப் பணத்தை பதுக்கி வைக்க உதவும் நாடுகளில், இதற்காக தனி
நிறுவனத்தை அமைத்து முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 170
நாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்களின் பட்டியல் தம்மிடம் இருப்பதாக
புலனாய்வு பத்திரிகையாளர் சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
-
- இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள இந்திய நபர்கள் பற்றி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
- தேர்தல் முன்கூட்டியே வராது: மக்களவைத் தேர்தல் திட்டமிட்டபடி 2014 மே
மாதம் நடைபெறும். முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை.
2013-ல் நிறைவேற்ற வேண்டிய பணிகளைப் பற்றி கூறியுள்ளேன். தேர்தலுக்கு
முன்பாக அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
-
- சர்க்கரைக்கான கூடுதல் மானியத்தை மத்திய அரசு ஏற்கும்: சர்க்கரை மீதான
கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிச்சந்தையில்
சர்க்கரை தாராளமாகக் கிடைக்கும். சர்க்கரை ஆலைகள் நியாய விலைக் கடைகளுக்கு
மானிய விலையில் சர்க்கரை வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு
நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலங்களுக்கு ஏற்படும் ரூ.2,600 கோடி
கூடுதல் செலவை மத்திய அரசு ஏற்கும். இப்போது, சர்க்கரை மானியமாக ரூ.2,600
கோடி வழங்கப்படுகிறது. இது, இனி ரூ.5,200 கோடியாக அதிகரிக்கும்.
-
- அன்னிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பு மறு ஆய்வு: நம் நாட்டில்
தாராளமயமாக்கல் கொள்கை செயல்பாட்டுக்கு வந்து 22 ஆண்டுகள் கடந்து விட்டன.
பல்வேறு துறைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அன்னிய நேரடி முதலீட்டு உச்ச
வரம்பை 2 குழுக்கள் மறு ஆய்வு செய்து வருகின்றன.
- பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் தலைமையிலான
குழுவும் ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட குழுவும் இப்போதைய
சூழ்நிலைக்கேற்ப அன்னிய முதலீட்டு உச்ச வரம்பை மாற்றி அமைப்பது குறித்து
ஆலோசித்து வருகின்றன என்றார் ப.சிதம்பரம்.3
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக