சனி, ஏப்ரல் 06, 2013

ஆந்திராவில் கட்டுப்பாடு ஆசிரியர்கள் ஜீன்ஸ் டீ,ஷர்ட் அணிய தடை !

  • ஆந்திராவில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிய மாநில அரசு தடை விதித்துள்ளது.
  • வகுப்பறையில் செல்போனில் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு உடை கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இந்நிலையில், ஆந்திர அரசின் பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கும் உடை கட்டுப்பாடுகளை அதிரடியாக அறிவித்துள்ளது.
  • அதன்படி, அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் ஜீன்ஸ் பேன்ட், 8 பாக்கெட், 4 பாக்கெட் வைத்த பேன்ட், டீ ஷர்ட், காலர் இல்லாத டீ ஷர்ட், பளபளப்பான உடைகள் போன்றவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போனில் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி அமைச்சர் ஷைலஜாநாத் சமீபத்தில் சில பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டபோது,
  • சில ஆசிரியர்கள் டீ ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து வந்திருப்பதை பார்த்ததாகவும், ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு பொருத்தமாகவும் கண்ணியமாகவும் உடை அணியும் வகையில் இந்த  கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உஷா ராணி தெரிவித்தார். உஷா ராணி மேலும் கூறுகையில், ‘‘ஆசிரியர்களை பார்த்துதான் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். எனவே, ஆசிரியர்கள் தங்களை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
  • கண்ணியமாக உடைகளை அணிய வேண்டும். மேலும், வகுப்பு நடக்கும் நேரத்தில் ஆசிரியர்கள் செல்போனில் பேசுவதாகவும் பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வந்தன. எனவேதான், செல்போன் பேசுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக