வெள்ளி, ஜனவரி 11, 2013

சி.ஆர்.பி.எஃப் வீரரின் உடலில் வெடிக்குண்டு: மாவோயிஸ்டுகளின் புதிய தந்திரமா?

ராஞ்சி:மோதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரரின் உடலில் வெடிக்குண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்டதால் கடும் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் உயிரை இழந்த வீரர் பாபுலால் பட்டேலின் (29) வயிற்றில்  வெடிகுண்டை வைத்து தைத்திருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து ஜார்க்கண்ட் டிஜிபி ஜி.எஸ்.ராத் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:உயிரிழந்த வீரர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பணியை
வியாழக்கிழமை காலை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அப்போது, பாபுலால் பட்டேல் உடலின் வயிற்றுப் பகுதியில் தையல் போடப்பட்டிருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் சந்தேகமடைந்தனர். உடனடியாக, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
பாபுலாலின் உடலை திறந்தவெளியில் வைத்து பரிசோதனை செய்தபோது, வயிற்றுப் பகுதியில் வெடிகுண்டை வைத்து தைத்திருப்பது தெரியவந்தது. உடனடியாக வெடிகுண்டை அகற்றிய நிபுணர்கள், அதை செயலிழக்கச் செய்தனர்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக