அல்கைதா அமைப்பின் தலைவரான அய்மான் அல் சவாஹிரியின் இளம் சகோதரரான முஹம்மத் அல் சவாஹிரியை சிரிய அரச படைகள் கைது செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 59 வயதாகும் எகிப்தை சேர்ந்த முஹம்மத் அல் சவாஹிரி சிரியாவின் தாரா நகரில் கிளர்ச்சிப்படையினருடனான கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. சிரியாவின் மக்கள் கிளர்ச்சியை அடுத்து அங்கு ஜனநாயகம் கோரி போராடிவரும் சிரிய விடுதலை இராணுவத்துக்கு அல்கைதா உதவியளித்து வருவதாக
அந் நாட்டு அரசும் மேற்கின் உளவு அமைப்புக்களும் கூறி வரும் நிலையிலேயே அய்மான் அல் சவாஹிரியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னர் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியின் போது அல்கைதாவுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த முஹம்மத் அல் சவாஹிரி கடந்த ஆண்டே விடுதலை செய்யப்பட்டிருந்தார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானவை எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் , தீவிரவாதத்துடனோ, அல்கொய்தாவுடனோ அவர் தொடர்பு அற்றவர் என்றும், புரட்சிப் படைகளுடனும் தொடர்பு இல்லாதவர் என்றும், சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவே அவர் சிரியா வந்ததாகவும் சிரிய அரசு தனது படுகொலைகளுக்கு நியாயம் கற்பிக்கவே முஹம்மத் அல் சவாஹிரியை கைது செய்துள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக