
அதன்படி,பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை 90 நாட்களுக்குள் விசாரித்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற ரேணுகா சவுத்ரி, வெளிநாடுகளில் உள்ளதுபோல் கற்பழிப்பு குற்றவாளிகளின் ஆணுறுப்பை ரசாயனம் செலுத்தி செயலிழக்க வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகின்றது.
டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவன் 18 வயதையடைய சில மாதங்களே உள்ள நிலையில் இந்த கூட்டுக்கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளான். இதனையும் கருத்தில் கொண்டு விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில், 18 வயதுக்குட்பட்ட குற்றவாளிகள் இளம்சிறார் காப்பகத்துக்கு தண்டனைக்காக அனுப்பப்படுவதை தவிரிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி 18 வயது நிறைவடையாதவர்கள் இளம் குற்றவாளிகள் என்ற தற்போதைய சட்ட நடைமுறையை திருத்தி 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பெரியவர்களுக்கு வழங்குவதுபோல் சம தண்டனை வழங்கவும் விவாதிக்கபட்டது என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன்.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் நல வாயிலாக மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்ற பின், இதற்கென அமைக்கப்பட்டுள்ள வர்மா கமிஷனின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் சட்டமாக நிறைவேற்றப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக