
கட்காரியின் நிறுவனத்திற்கு பணம் முதலீடு செய்தது ஐ.ஆர்.பி. என்ற ஐடியல் ரோட் பில்டர்ஸ் (Ideal Road Builders) என்ற நிறுவனம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கட்காரி மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுத்துறை அமைச்சராக இருந்த 1995ம் வருட காலகட்டத்தில் ஐ.ஆர்.பி.க்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தப் பணிகள் கிடைத்திருந்தன. அச்சமயத்தில் 164 கோடி ரூபாய் பணத்தை ஐ.ஆர்.பி. கட்காரியின் சொந்த நிறுவனமான பி.பி.எஸ்.எல்.லுக்குக் கடனாக வழங்கியது.
கட்காரிக்கெதிராக உயர்ந்துள்ள முதலீடு குறித்த புகார்கள் நிறுவனங்களின் பதிவாளர் (Registrar of Companies) மூலமாக விசாரிக்கப்படும் என்று மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.
மும்பையிலும், நாக்பூரிலும் கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகத்தின் முக்கிய விசாரணையை நிறுவனங்களின் பதிவாளர் நடத்துகிறார். ஏனெனில் பூர்த்தி குழுமத்தின் நிறுவனங்கள் பதிவு செய்திருப்பது இந்த இரண்டு நகரங்களிலும்தான்.
இந்த நிறுவனத்தின் முதலீடுகளில் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக அறியப்பட்டால் இது குறித்த விசாரணை சிறப்பு மோசடிப் பிரிவின் (Special Fraud Unit) கீழ் மாற்றப்படும். இதற்கிடையில் பி.பி.எஸ்.எல்.லுக்கெதிரான புகார்கள் குறித்த விசாரணையை வருமான வரித் துறையும் ஆரம்பித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக