
அரசுக்கு மதுவின் மூலம் வரும் வருமானம்தான் பெரிதாக தெரிகிறது. ஆனால் மது வியாபாரத்தால் சீரழிந்த குடும்பங்கள் பல கோடி. இதை நம்பி தான் அரசின் இலவச திட்டங்கள் செயல்படுகின்றன. ஒருபக்கம் மக்களை அழித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இலவசங்களை அள்ளி வீசுகிறது நமது மதிகெட்ட அரசுகள். மது அருந்துபவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஆகும் மருத்துவ செலவோ ரூ. 2 லட்சம் கோடி.
குடி குடியைக் கெடுக்கும்” என்பது முதுமொழி. குடிப்பதால் கல்லீரல் பாதிப்படைகிறது. உடல் மஞ்சள் ஆகுதல், பித்த நீர்க்குழாய் அடைப்பினால் வயிற்றுவலி, பசியின்மை உருவாகும். தோளிலும் காலிலும் தசை நார்கள் செயலிழக்கும். மூளை பாதிக்கப்பட்டு மறதி, சோர்வு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவதுடன் மனநோயும் ஏற்படும். மூளை, இதயம், நரம்பு, இனவிருத்தி உறுப்பு, இரைப்பை, கணையம் ஆகியவை நாளடைவில் பழுதடையும். வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்.
இப்படி மனிதனுக்கு கேடு விளைவிக்கும் இந்த மதுவை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்பதே மனித நேயம் உள்ள ஒவ்வொரு மனிதனின் வேண்டுகோள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக