வியாழன், பிப்ரவரி 02, 2012

நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு !

 திருநெல்வேலி: கூடங்குளம் அணு உலை ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல் தொடர்பாக போராட்டக் குழுவினர் 25 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கூடங்குளம் அணு உலை தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள குழுவினருடன் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர்

எகிப்து கால்பந்து போட்டியில் பயங்கர கலவரம். 73 பேர் பலி !

A big violence in Egypt football match. 73 deadஎகி்ப்து நாட்டில் கால்பந்து போட்டியின் போது நடைபெற்ற மோதலி்ல் சுமார் 73 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எகிப்து நாட்டில் உள்ள சிட்டி ஆப் போர்ட் நகரில் உள்ளூர் கால்பந்து அணிகளான அல் அலி மற்றும் அல் மாஸ்ரி ஆகிய அணிகள் மோதியது. இரு அணிகளுக்கும் பலத்த ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்தது. இந்நிலையில் சிட்டி ஆப் போர்ட் நகரில் மேற்கண்ட இரு அணிகளும்

அமெரிக்காவிடம் கையேந்தும் ஆசியா: ஒபாமா தம்பட்டம் !

தங்களை மேம்படுத்தவும், சீனாவிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், ஆசிய நாடுகள் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒபாமா கூறியதாவது: கடந்த மூன்றாண்டுகளில், நாம் அனேக பிரச்னைகளைக் கடந்து வந்து விட்டோம்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன் ஆட்சி !

ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நேட்டோ படைகளின் வெளியேற்றத்துக்குப்பின் பாகிஸ்தானின் மறைமுக உதவியுடன் ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வரும்" என்று ரகசிய அமெரிக்க ராணுவ தகவலை மேற்கோள் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து கேட்கப்பட்ட போது நேட்டோவின் செய்தி தொடர்பாளர் ஜிம்மி கம்மிங்ஸ் அமெரிக்க ராணுவ தகவலை உறுதி செய்தார். "ஆனால் அது நேட்டோ படைகள் வெளியேற்றத்தின் பிறகு ஆப்கனில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்த பல்வேறு வாய்ப்புகள் குறித்த

புதன், பிப்ரவரி 01, 2012

கொழும்பில் முஸ்லீம் தீவிரவாதக் குழுக்களா? : தன் முகத்தில் தானே எச்சில் உமிழும் தமிழ் தளங்கள்

கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையை ஆட்கொண்டிருந்த தமிழ் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு, நாட்டு மக்கள் அனைவரும் சுபீட்சமாக வாழும் நிலை உருவாகியிருக்கிறது. தமிழர்களுக்காக போராடுவதாக கூறிக் கொண்டு தமிழ் பொது மக்களை கொலை செய்து அதில் இன்பம் கண்ட மனித மிருகம் பிரபாகரின் அடிவருடிகள் அடியோடு அழிக்கப்பட்டுள்ள இவ்வேலையில் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற பாணியில் “முஸ்லீம் ஆயுதக் குழுகள்” என்ற கோஷத்தைத்

கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம் !

 கூடங்குளம் : இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம் !
காவிக் கிரிமினல்களின் ரவுடித்தனம்
மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. இப்போதே இவர்களை விரட்டாவிட்டால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும்.கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக ஜனநாயக முறையில் தீவிரமாக போராடி வருகிறார்கள். இதை முறியடிப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசு, தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், பார்ப்பன ஊடகங்கள், காங்கிரசு – பா.ஜ.க முதலான ‘தேசிய’க் கட்சிகள் என அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர். இதில் போராடும் மக்களின் அச்ச உணர்வை போக்கிய பிறகு மின் உற்பத்தியை தொடங்கலாமென்ற நாடகத்தை மத்திய,

அதிக எண்ணிக்கையில் ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை !

அதிக எண்ணிக்கையில் ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கைசட்டசபையில் இன்று துரைக்கண்ணு (அ.தி.மு.க.) கேட்ட கேள்விக்கு அமைச்சர் முகம்மதுஜான் அளித்த பதில் வருமாறு:- ஹஜ் பயணம் செல்ல அதிக இடம் ஒதுக்க வேண்டும் என்றால் சவூதி அரேபியா அரசு கூடுதல் இடம் தந்து, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும். முன்பு தமிழ்நாட்டில் இருந்து 2,612 பேர்தான் ஹஜ் பயணம் சென்றனர். தற்போது

கொல்கத்தா: ரெயிலில் விட்டு செல்லப்பட்ட 6 மாத குழந்தை !

கொல்கத்தா: ரெயிலில் விட்டு செல்லப்பட்ட 6 மாத குழந்தைகொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த டூபன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 6 மாத பெண் குழந்தையை யாரோ விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். நெடுநேரம் ஆகியும் குழந்தை தனியாக இருந்ததை பார்த்து பயணிகள் அஸன்சால்

அர்ஜெண்டினாவுடன் மோதல்: இங்கிலாந்தின் நவீன போர்கப்பல் பாக்லாந்து விரைந்தது !

அர்ஜெண்டினாவுடன் மோதல்: இங்கிலாந்தின் நவீன போர்கப்பல் பாக்லாந்து விரைந்ததுஅர்ஜெண்டினா நாட்டுக்கு அருகே இங்கிலாந்துக்கு சொந்தமான பாக்லாந்து தீவு உள்ளது. இந்த தீவை அர்ஜெண்டினா எங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி வருகிறது. 1982-ம் ஆண்டு அர்ஜெண்டினா பாக்லாந்து தீவை கைப்பற்றி கொண்டது. இதனால் இங்கிலாந்து தாக்குதல்

ஒரிசாவில் பயங்கரம் : அமைச்சர் மண்டையை இரும்பு கம்பியால் உடைத்த வாலிபர் !

ஒரிசாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் அமைச்சரின் மண்டை உடைந்தது. இது தொடர்பாக பெண் வேடம் அணிந்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஒரிசா  மாநிலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருப்பவர்

சட்டசபையில் ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே கடும் காரசார மோதல் மூண்டது. இதன் இறுதியில் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக கருதப்படும் இந்த மோதல்

பார்சல் குண்டு வழக்கில் தமுமுக தலைவர் ரிபாயிக்கு ஆயுள் தண்டனை !

சென்னை: பார்சல் குண்டு மூலம் இந்து முன்னணி தலைவரின் மனைவி கொல்லப்பட்ட வழக்கில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ரிபாயி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு நாகூரைச் சேர்ந்த இந்து முன்னணித் தலைவரான முத்துக்கிருஷ்ணன் வீட்டுக்கு தபால் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்த முத்துக்கிருஷ்ணனின் மனைவி

இடிந்தகரை வீரமங்கைகளிடம் செருப்படி வாங்கிய இந்து முன்னணி !

கூடங்குளம் அணு மின்நிலயம் தொடர்பாக 4வது காட்ட பேச்சு வார்த்தை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் என மத்திய நிபுணர் குழு அறிவித்திருந்தது. இதில் மத்திய நிபுணர் குழு சார்பாக  முத்துநாயகம் தலைமையில், 12 பேர் வந்திருந்தனர். அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவின் மக்கள் தலைவர் உதயகுமார் தலைமையில் கிராமத்து மக்கள் ஜீப், மற்றும் வேன்களில் வந்தனர். இவர்கள் வந்த வாகனங்கள் கலெக்டர் அலுவுலகத்தில் நுழையும் பொழுது அங்கே திட்டமிட்டு காத்திருந்த சுமார் 20 இந்து முன்னணியினர் கிராம மக்கள் வந்த 

தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்- ஜெ.ஆவேசம் !

 சென்னை: தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன்.அதிமுகவினரை திருப்திப்படுத்தவே விருப்பமில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தேன். தகுதியில்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் தேமுதிகவினர் போலத்தான் நடப்பார்கள்

ஆளுங்கட்சியினரை நோக்கி 'சைகை'-விஜயகாந்த் மீது உரிமை மீறல் பிரச்சினை !

 சென்னை: ஆளுங்கட்சி எம்எல்ஏக்களைப் பார்த்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரலைக் காட்டி சைகை செய்தது குறித்து உரிமை மீறல் குழுவின் பரிசீலனைக்கு உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் ஜெயக்குமார். தமிழக சட்டசபை இன்றுஅல்லோகல்லப்பட்டு விட்டது. தங்களைப் பேச விடாமல் தடுப்பதாக தேமுதிகவினரும், அவர்கள் அரசை தேவையில்லாமல் விமர்சிப்பதாக அதிமுக உறுப்பினர்களும் கடும் வாக்குவாதத்தில்

திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் தனித்து நின்று பாருங்கள்- விஜய்காந்துக்கு ஜெ. ஆவேச சவால் !

 சென்னை சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கப் போகிறாம். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். நாங்கள் அங்கு மகத்தான வெற்றியை பெறப் போகிறோம். உங்களால் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று தேமுதிகவுக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பகிரங்கமாக சவால் விடுத்தார். ஜெயலலிதா விடுத்த இந்த பகிரங்க சவால் மூலம் அதிமுக- தேமுதிக இடையிலான உறவும், நட்பும், கூட்டணியும் அதிகாரப்பூர்வமாக

கவர்னர் ஆட்சியில் தேர்தலை நடத்துங்க, நான் சந்திக்கத் தயார்-விஜயகாந்த் பதில் சவால் !

Vijayakanth
 சென்னை: சங்கரன்கோவிலுக்கு கவர்னரின் ஆட்சியின் கீழ் இடைத் தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தனித்துப் போட்டியிடத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பதில் சவால் விட்டுள்ளார். அதிமுக, தேமுதிக இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்துள்ளது.மிக மிக குறுகிய காலத்திற்குள் உடைந்து சிதறிப் போயுள்ள இந்த வித்தியாச கூட்டணி இப்போது

தொடங்கியது சண்டை ...விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம் !

Vijayakanth
 சென்னை சட்டசபையில் இன்று அதிமுக, தேமுதிக இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று எதிர்க்கட்சியான பின்னர் முதல் முறையாக அக்கட்சி உறுப்பினர்கள்

காந்தி தலையை வெட்டிய இந்து முன்னணி பயங்கரவாதிகள் !

கோயம்புத்தூர் : ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க்கில் அமைந்துள்ள காந்தி சிலையை ஹிந்துத்துவ அமைப்பான பாரதீய சேனாவை சேர்ந்த பயங்கரவாதிகள் உடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஹிந்துத்துவ அமைப்பான பாரதீய சேனாவின் பொதுச்செயலாளர் சுரேஷ்ராஜன் (வயது 37) இன்னொரு தலைவரான மின்னல் நாகராஜ்

இஸ்மாயில் ஹனிய்யா ஈரான், வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம்

காஸ்ஸா:ஃபலஸ்தீன் எதிர்ப்பு போராட்ட இயக்கமான ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்ஸாவின் பிரதமர் இஸ்மாயில் ஹானிய்யா ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். ஹமாஸின் மூத்த தலைவர் காலித் மிஷ்அல் ஜோர்டான் மன்னர் மற்றும் கத்தர் இளவரசரை ஏற்கனவே சந்தித்து இருந்தார். ஹானிய்யா ஈரான், குவைத், பஹ்ரைன், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது அமெரிக்காதான்: ஒபாமா

வாஷிங்டன்:அல்காயிதா-தாலிபான் போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளை கொன்று குவிக்கும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது அமெரிக்காதான் என அந்நாட்டின் அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். சோசியல் நெட்வர்க் இணையதளமான கூகிள் ப்ளஸ் மூலமாக நடத்திய ஒரு மணிநேரம் நீண்ட வீடியோ உரையில் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு சீர்குலைந்ததன்

100 ரூபாயும், வாட்ச்சும் திருடிய இருவருக்கு 7 ஆண்டு சிறை-கோவை கோர்ட் அதிரடி தீர்ப்பு !

 கோவை: கோவையில் மருந்துக் கடைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து கத்தியைக் காட்டி 100 ரூபாய் பணத்தையும், கைக்கடிகாரத்தையும் திருடிய இருவருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து கோவை கோர்ட் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைக் கேட்ட பொதுமக்கள், வெறும் 100 ரூபாயைத் திருடியதற்கு இவ்வளவு

கூடன் குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர் மீதான தாக்குதல்: SDPI கடும் கண்டனம்

 கூடன் குளம் அணு உலைக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றனர். இன்னும் 106 வது நாளாக இடிந்த கரை கிராமத்தில் அகிம்சை வழியில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய நிபுணர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போராட்ட குழுவினர் மீது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்குதல்

பிரதமர் அலுவலகத்தில் சிறைவைக்கப்பட்ட தா.பாண்டியன் !

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன், ஈழத்தமிழர்கள் விஷயமாக பிரதமர் மன்மோகன்  சிங்கைச் சந்தித்தபோது, அந்தப் பேச்சுவார்த்தை குறித்து வெளியே சொல்லக்கூடாது என பிரதமர் அலுவலகத்திலேயே  சிறை வைக்கப்பட்டதாக ஒரு தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது!
தா.பாண்டியனுக்கு

கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது தாக்குதல் :அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

 கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீதான தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், "சுற்றுச்சூழலுக்கும், மக்கள் உயிருக்கும் பேரபாயம் விளைவிக்கக்கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தொடங்கக் கூடாது என்று, 100 நாள்களுக்கும் மேலாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 

யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு,புதிய ஒப்பந்தம். 25 நாடுகள் ஒப்புதல் !

யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு, சிக்கன நடவடிக்கைகள் மட்டும் பலன் தராது என, சர்வதேச நிதியமைப்பு உள்ளிட்ட அமைப்புகளும் நாடுகளும் வலியுறுத்தி வரும் வேளையில், ஜெர்மனியும், பிரான்சும் முன்வைத்த பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அடங்கிய புதிய ஒப்பந்தத்தை யூனியனின் 25 நாடுகள் ஏற்றுக் கொண்டன. பிரிட்டனும், செக் குடியரசும் ஒப்பந்தத்திற்கு

டுவிட்டரின் செய்தி தணிக்கை முடிவிற்கு சீனா, தாய்லாந்து வரவேற்பு !

நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்றபடி, செய்திகளைத் தணிக்கை செய்யும் தங்கள் முடிவில், எவ்வித மாற்றமும் இல்லை என, "ட்விட்டர்' சமூக வலைத் தள தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
"பேஸ்புக், ட்விட்டர்' உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வெளியாகும் செய்திகளில்,

மூலப் பொருள் ஏற்றுமதியில் சீனாவுக்கு எதிரான வழக்கில் இந்தியாவிற்கு சாதகமாக தீர்ப்பு !

 மூலப் பொருள் ஏற்றுமதியில் சீனாவுக்கு எதிரான வழக்கில் உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மூலப் பொருள்கள் ஏற்றுமதியில் உலக வர்த்தக அமைப்பு உருவாக்கியுள்ள வழிகாட்டுதலை மீறும் வகையில் சீனாவின் செயல்பாடுகள் உள்ளதாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  இது தொடர்பாக டபிள்யூடிஓ-வின் மேல் முறையீட்டு ஆணையம் அளித்துள்ள தீர்ப்பில், இரும்பு, அலுமினியம் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் ஏற்றுமதி தொடர்பாக

அமெரிக்காவின் அணுமின் நிலையத்தில் திடீர் கோளாறு?


 திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்திலுள்ள அணுஉலையின் செயல்பாடு திங்கள்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டது. அணு உலையைக் குளிர்விப்பதற்காகவும், அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் டர்பைன் பகுதியில் இருக்கும் நீராவி வெளியேற்றப்பட்டு வருகிறது என்று இந்த அணுஉலையை பராமரித்து வரும் எக்செலான் என்கிற தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சிகாகோ நகரில் இருந்து சுமார் 153 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பைரோன்