இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின்
கால் இறுதி ஆட்டத்தில் லீ நா-சிபுல்கோவா ஆகியோர் மோதுகிறார்கள்.
சர்வதேச டென்னிஸ்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இன்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை லீ நா 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 268-ம் நிலை வீராங்கனை அலெக்சான்ட்ரா வோஸ்னியாக்கை (கனடா) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
கால் இறுதியில் சிபுல்கோவா
மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 11-வது இடம் வகிக்கும் டொமினிகா சிபுல்கோவா (சுலோவக்கியா) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் 9-ம் நிலை வீராங்கனையான கிவிடோவாவை (செக் குடியரசு) சாய்த்தார். கால் இறுதி ஆட்டத்தில் லீ நா-சிபுல்கோவா பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இருவரும் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் சந்தித்து இருந்தனர். அதில் லீ நா வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற ஆட்டங்களில் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), ஜான்கோவிச் (செர்பியா), பிளாவியா பென்னட்டா (இத்தாலி), ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), சிமோனா ஹாலெப் (ருமேனியா), தகுதி சுற்று வீராங்கனை டெல்லாகு (ஆஸ்திரேலியா) ஆகியோரும் வெற்றி கண்டு கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
ஜோகோவிச் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அலெசான்ட்ரோ கொனாலெஸ்சை (கொலம்பியா) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 4-வது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், குரோஷிய வீரர் மரின் சிலிச்சை சந்திக்கிறார். முன்னதாக மரின் சிலிச் தனது 3-வது சுற்றில் ஸ்பெயின் வீரர் ராப்ரிடோவை 6-4, 6-3 என்ற நேர் செட்டில் தோற்கடித்து இந்த ஆண்டில் 20-வது வெற்றியை பதிவு செய்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக