- கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள் கழுத்து, கை, கால்களை பிளேடால் அறுத்து தற்கொலை மிரட்டல் விடுத்தனர். கோவை மத்திய சிறையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
- சிறையில் கஞ்சா, செல்போன் புழக்கத்தை கட்டுப்படுத்த சிறை போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். செல்போன், கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்கும் கைதிகள் வேறு பிளாக்கிற்கு உடனடியாக மாற்றப்பட்டு, தனியறையில் அடைக்கப்படுவர். பின், அந்த கைதிகளின் நடவடிக்கையை பொறுத்து மீண்டும் பழைய பிளாக்கிற்கு இடம் மாற்றுவர்.
கோவை கணபதியை சேர்ந்த சவுந்தர் (26) என்ற விசாரணைக் கைதியிடம் சோதனையின் போது கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வால்மேடு பிளாக்கில் இருந்து 2வது பிளாக்கில் தனியறையில் அடைத்தனர். அடிக்கடி சோதனை என்ற பெயரில் சிறை காவலாளிகள் தொந்தரவு செய்வதாலும், வேறு பிளாக்கிற்கு மாற்ற வலியுறுத்தியும், கைதி சவுந்தர் நேற்று முன்தினம் தன் நாக்கை கடித்து காயப்படுத் திக் கொண்டார். இவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிறை போலீசார் சேர்த்தனர்.- நேற்று காலை சிறையில் உள்ள பிளாக்குகளில் சிறை போலீசார் வழக்கம் போல் சோதனை செய்தனர். அப்போது, சிறையின் வால்மேடு பகுதியிலும் சிறை போலீசார் சோதனை செய்தனர். அங்கிருந்த கைதிகளிடம் செல்போன் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை தரக்கோரி கைதிகளை அடித்ததாக கூறப்படுகிறது. வால்மேடு பகுதி பிளாக்கில் அடிக்கடி சிறை போலீசார் சோதனை செய்து கைதிகளை தாக்குவதை கண்டித்து கோவை போத்தனூரை சேர்ந்த பிரபு (28), திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மதன்குமார் (24), கரூரை சேர்ந்த அர்ஜுனன் (24) ஆகிய மூன்று விசாரணை கைதிகள் அங்கு கிடந்த பிளேடை எடுத்து கை, கால்களை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட நின்றனர். மேலும், மற்றொரு கைதி சரவணன் என்பவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
- இது குறித்து தகவலறிந்த சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த கைதிகளை உடனடியாக சிகிச்சைக்காக சிறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறை கண்காணிப் பாளர் ராஜேந்திரன் கூறுகையில், “சிறையில் வால்மேடு பகுதி பிளாக்கில் உள்ள கைதிகள் பிரபு, மதன்குமார், அர்ஜூனன் ஆகிய கைதிகள் அடிக்கடி குற்ற வழக்குகள் தொடர்பாக சிறைக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களை போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி கை, கால்களை கிழித்துக் கொண்டனர். காயமடைந்த கைதிகள் சிகிச்சைக்காக சிறை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரிக்கப்படுகிறது’’ என்றார்.3
ஞாயிறு, ஏப்ரல் 07, 2013
விசாரணை கைதிகள் கழுத்து, கை, கால்களை பிளேடால் அறுத்து மிரட்டல்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக