ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம்: கடந்த செவ்வாய்க்கிழமை (01/01/2013) ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலப் பிரதேசத்தின் இஸாவியே கிராமத்தில் அமைந்துள்ள பலஸ்தீனரின் வீட்டை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் இடித்துத் தகர்த்துள்ளது .உள்ளூர்வாசிகள் தகவல் அளிக்கையில், "குறித்த வீடு ரஃபாத் அல் இஸாவி என்பவருக்குச் சொந்தமானது. கடந்த பத்து ஆண்டு காலமாக அவர் தன் குடும்பத்தினரோடு அவ்வீட்டில் வாழ்ந்து வருகிறார். திடீரென்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்திடம் அவ்வீட்டுக்கான நிர்மாண அனுமதிப் பத்திரம் பெறப்படவில்லை என்ற பெயரில் அங்குவந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் வீட்டை இடித்துத் தகர்த்துவிட்டனர்" என்று தெரிவித்துள்ளனர்.இதே குற்றச்சாட்டுடன் ஏராளமான பலஸ்தீன் வீடுகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தினால் படிப்படியாக இடித்துத் தகர்க்கப்பட்டு வருவதாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரை முழுமையாக யூதமயப்படுத்தும் இரகசிய செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது நடைபெறுகிறது என்றும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக