ஆந்திராவைச் சேர்ந்த சமூக ஆர்வலருக்கு, மர்ம நபர்கள் சிலர், வலுக்கட்டாயமாக, விஷ ஊசி போட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், ஸ்ரீனிவாச ராவ். அரசுத் திட்டங்களில் நடக்கும் ஊழல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வாங்கி வெளியிட்டு, அம்பலப்படுத்தி வந்தார். இதனால், அவருக்கு பல எதிரிகள் உருவாகினர். இது தொடர்பாக, சமீபத்தில், போலீசில் புகார் செய்திருந்த அவர், தன் உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனாலும், இவருக்கு போலீஸ் தரப்பில், பாதுகாப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள, மர்காபுரம் என்ற கிராமத்தில் தங்கியிருந்த அவரை, சில மர்ம நபர்கள், ஒரு மறைவான இடத்துக்கு கடத்திச் சென்றனர். அங்கே, அவருக்கு, வலுக்கட்டாயமாக, விஷ ஊசியை செலுத்தினர்.
இதையடுத்து, அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த பொதுமக்கள், ஸ்ரீனிவாசராவை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர், கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எந்த வகையான விஷ ஊசி செலுத்தப்பட்டது என்ற விவரத்தை, டாக்டர்கள் தெரிவிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக