வெள்ளி, செப்டம்பர் 11, 2015

மாநாட்டில் பெண்களை வைத்து குத்தாட்டம் போட்டது தமிழகத்திற்கு அவமானம்: இளங்கோவன் கண்டனம்

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெண்களை வைத்து குத்தாட்டம் போட்டது தமிழகத்திற்கு அவமானம் என இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேதாரண்யத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது அதிமுக மாநாடே தவிர, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அல்ல. விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெற்ற இடம் வரை எங்கும் அதிமுக கொடிகளும், பேனர்களும் காட்சி அளித்தன. மாநாட்டில் பெண்களை வைத்து குத்தாட்டம் போட்டது தமிழகத்திற்கு அவமானம். 

தொழில் தொடங்குவோருக்கு தட்டுப்பாடற்ற மின்சாரம் வழங்க வேண்டும். 24 மிணி நேரமும் மின்சாரம் தருவோம் என்று சொன்னால் மட்டும்போதாது. எப்படி தரப்படும் என்பதை சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் பல இடங்களில் இன்றும் மின்வெட்டு இருந்துகொண்டிருக்கிறது. அதேபோல் நிலங்களை தரும்போது விவசாயிகள் பாதிக்கப்படாமல் தரமுடியும் என்பதையும் சொல்ல வேண்டும். 

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்துள்ள அதிமுக அரசு, தொழில் துவங்குவோரிடம் லஞ்சம் பெற மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும் என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக