சனி, மார்ச் 28, 2015

பட்ஜெட்டை கண்டித்து போராட்ட அறிவிப்பு முதல்வர் வீடு முற்றுகை தடுக்க விவசாயிகளுக்கு வீட்டுச்சிறை !!!

சென்னையில் முதல்வர் வீட்டை முற்றுகையிட இருந்த விவசாயிகள் வீடுகளில் சிறை வைக்கப்பட்டனர். திருச்சியில் இதைகண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்ததால் சாலையில் படுத்து மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சி காரணமாக விவசாயிகளால் பயிர்கள் சாகுபடி செய்ய முடியவில்லை.

வெள்ளி, மார்ச் 27, 2015

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் செப்டம்பர் 30–ந் தேதி நடைபெறும் அகில இந்திய தலைவர் தேர்தலில் ராகுல்காந்தி தேர்வுபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி அதிக வருடங்களாக இருந்து வருகிறார். இவர் 1998–ம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 வருடங்கள் தலைவராக இருந்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் 5 மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

அமெரிக்காவின் மன்ஹேட்டன் நகரில் ஐந்து அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர சத்தத்துடன் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அதற்கு அருகே உள்ள மற்றொரு அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

புதன், மார்ச் 25, 2015

5 வயது சிறுமி கடத்தி கொலை: கோவில் குருக்களுக்கு 10 ஆண்டு ஜெயில் ரூ.5 ஆயிரம் அபராதம் !!!

குடியாத்தம் பாண்டி நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். அதே பகுதியில் ஆஞ்சநேயர் கோவிலில் குருக்களாக உள்ளார். இவரது வீட்டின் எதிரே உள்ள இந்திராகாந்தி அரசு நிதியுதவி தொடக்க பள்ளியில் டவுன் பிச்சனூர் காளிம்மன்பட்டினம் சேர்ந்தவர் ராஜா என்பவரது 5 வயது மகள் ராஜேஸ்வரி 1–ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்தோனேசியாவில் இரு ஆஸ்திரேலியர்களின் கருணை மனுவை அதிபர் நிராகரித்த விவகாரம்: நீதிமன்றத்தில் அப்பீல்

இந்தோனேசியாவின் பாலி தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.


இந்த தண்டனை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே நிறைவேற்றப்படவிருந்த நிலையில், சர்வதேச அழுத்தங்கள் காரணமாக தண்டனையை நிறைவேற்றுவது ஒத்திவைக்கப்பட்டது.

திங்கள், மார்ச் 23, 2015

பிரதமர் மோடி தான் விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத்துகிறார்: அன்னா ஹசாரே பரபரப்பு குற்றச்சாட்டு

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பிரதமர் மோடி தான், விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத்துகிறார் என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார். 

மனதோடு பேசுகிறேன் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் மோடி, எதிர்கட்சிகள் விவசாயிகளை தவறான பாதையில் வழி நடத்துகின்றன என்று குற்றம் சாட்டியிருந்தார்.

மலேசியாவில் கொத்தடிமையாக நடத்தப்பட்ட இந்திய இளைஞன் மீட்பு : இன்று விசாரணை!!!

சென்னை கிருஸ்ணாநகரை சேர்ந்த பர்விஸ் மாலிக் என்னும் முஸ்லிம் இளைஞனை சிவா என்னும் நபர் மலேசியாவில்  உள்ள உணவகம ஒன்றிற்க்கு  வேலை  தருவதாக கூறி  அழைத்து சென்று தனது வீட்டில் கொத்தடிமையாக வைத்து சித்தரவதை செய்துள்ளார் .

சனி, மார்ச் 21, 2015

சென்னை தலைமை செயலகம் முற்றுகை! எஸ்.டி.பி.ஐ கட்சினர் ஆயிரக்கணக்கானோர் கைது!

தமிழகத்தில் லஞ்சம், ஊழலை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தியும் கடந்த மார்ச் 3 முதல் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சென்னை தலைமைச் செயலகம் முற்றுகையிடும் போராட்டம் நேற்று  நடைபெற்றது.

ஐஏஎஸ் அதிகாரி தற்கொலை விவகாரம், சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல்

கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி தற்கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மாநில முதல்வர் சித்தராமையாவிடம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான அரசின் முடிவை, நாளை மறுதினம் சட்டப்பேரவையில் சித்தராமையா தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், மார்ச் 19, 2015

உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்க அணி முன்னேறியது. 

சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர்.

அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது!-மும்பை உயர்நீதிமன்றம்

ஆட்சியாளர்களை கார்ட்டூன், கேலிச்சித்திரங்கள் மூலம் விமர்சித்த காரணத்தால் ஒருவர் மீது தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இத்தகைய கேலிகள் வன்முறைகளை தூண்டவோ, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கவோ செய்யாவிட்டால் தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என்று தலைமை நீதிபதி மொஹித் ஸென், நீதிபதி ஜி.எஸ்.குல்கர்ணி ஆகியோரடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.

புதன், மார்ச் 18, 2015

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து 9 மாவட்ட விவசாயிகள் மாநாடு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதாவை எதிர்த்து 9 மாவட்ட விவசாயிகள் மாநாடு தஞ்சையில் வருகிற 23–ந் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலானது) பொதுசெயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான) டாக்டர் வே.துரைமாணிக்கம் ஆகியோர் கூட்டாக இன்று காலை தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

திங்கள், மார்ச் 16, 2015

சீன பகுதியில் மீண்டும் குண்டு விழுந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என மியான்மருக்கு சீனா எச்சரிக்கை


மியான்மர் நாட்டில், சீன எல்லைப்பகுதியில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக மியான்மர் படைகள் அவ்வப்போது வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் மியான்மர் விமானம் போட்ட ஒரு குண்டு, சீனப்பகுதியில் விழுந்து, அதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, மார்ச் 15, 2015

தடையை மீறி நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஒற்றுமைப் பேரணி : ஆயிரக்கணக்கானோர் கைது!

இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கருத்து தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முகம்மது இஸ்மாயீல் அவர்கள், 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உதயமான தினமான பிப்ரவரி 17 அன்று ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்தோம் எனற முழக்கத்தை முன்வைத்து தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

சனி, மார்ச் 14, 2015

கொலை மிரட்டல் குற்றச்சாட்டு குறித்து டிராபிக் ராமசாமி விளக்கம்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி (82). கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரியை சேர்ந்த வீரமணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த டிராபிக் ராமசாமிக்கு ஜெயிலில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கிருந்து மயங்கிய நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதி தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். உடல் நிலை தேறியதும் அவரை கைதிகள் வார்டில் சேர்த்தனர்.

நிலச்சட்டத்தை ஆதரித்தது ஜெயலலிதாவின் நிதானமற்ற போக்கு: விஜயகாந்த் விமர்சனம்

"கடந்த மத்திய ஆட்சியில் ஒரு நிலைப்பாடு, தற்போதைய மத்திய ஆட்சி அமைந்தபோதும் அதே நிலைப்பாடு. ஆனால் இப்போது நாடாளுமன்றத்தில் அப்படியே அந்தர் பல்டி அடித்து நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவை அதிமுக ஆதரித்தது ஏன்?" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலச்சட்ட விவகாரத்தில் அதிமுக நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டிய அவர், "நிலையற்ற கொள்கையும் நிதானமற்ற போக்கும் கொண்டுள்ள ஜெயலலிதா, தன்னுடைய வழக்கு சதியும் விதியும் இணைந்து நடத்திய சதிராட்டத்தால் தொடுக்கப்பட்ட வழக்கு என்று புலம்புகிறார்" என்று அவர் விமர்சித்துள்ளார்.

வெள்ளி, மார்ச் 13, 2015

எரிமலை வெடிப்பு: கோஸ்டா ரிகாவின் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது

எரிமலை வெடிப்பின் காரணமாக வளிமண்டலத்தில் பரவியுள்ள சாம்பலால் கோஸ்டா ரிகாவின் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வியாழன், மார்ச் 12, 2015

புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டுகள் வீச்சு : இந்து முன்னனிக்கு தொடர்பா ?

சென்னையில் புதிய தலைமுறை டி.வி.சேனல் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு உள்ளது. 

புதிய தலைமுறை டி.வி.சேனல் அலுவலகம் மீது, டிபன் பாக்ஸில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டது. சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

புதுவை முன்னாள் அமைச்சர் ரேணுகா அப்பாதுரை மரணம்

புதுவை முன்னாள் கல்வி அமைச்சர் ரேணுகா அப்பாதுரை. ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த இவருக்கு நேற்று இரவு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் ரேணுகா அப்பாதுரை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

புதன், மார்ச் 11, 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜனவரி 5-ம் தேதி தொடங்கிய விசாரணை முடிவுக்கு வந்தது.

கேரளாவில் மாட்டுக்கறி உண்ணும் விழா: மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் மாட்டுக்கறி தடைக்கு எதிர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பல போராட்டங்களையும், கடும் விமர்சனங்களையும் சந்தித்து வரும் நிலையில் கேரளாவில் இன்று பொது இடத்தில் மாட்டுக்கறி சமைத்து இந்து மற்றும் முஸ்லீம்கள் என்று அனைவருக்கும் வழங்கும் விழா நடைபெற்றது.

செவ்வாய், மார்ச் 10, 2015

திமாபூர் சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்! - நாகலாந்து முதல்வர் பதவி விலக கோரிக்கை!

திமாபூர் சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்! - நாகலாந்து முதல்வர் பதவி விலக கோரிக்கை!
குவஹாத்தி: அஸ்ஸாமை சேர்ந்த வங்க மொழி பேசும் செய்யது ஷரீஃபுதீன் கான் என்பவரை நாகலாந்தின் திமாபூரில் கொடிய முறையில் கும்பல் ஒன்று படுகொலை செய்ததை பாப்புலர் ஃப்ரண்டின் வட கிழக்கு மாகாண தலைவர் முகம்மது காலித் ரஷாதி வன்மையாக கண்டித்துள்ளார்.

திங்கள், மார்ச் 09, 2015

தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூடியது பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழக சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் பிப்ரவரி 17–ந் தேதி தொடங்கியது. அன்று கவர்னர் கே.ரோசய்யா உரை நிகழ்த்தினார். அந்த சட்டசபை கூட்டத்தொடர் முடிவு பெறவில்லை.

ஞாயிறு, மார்ச் 08, 2015

239 பேருடன் மலேசிய விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவு

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. இவ்விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர்.

விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை இந்திய பெருங்கடலில் தேடும் பணி தீவிரமாக நடந்தது. இப்பணியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டன. இருந்தும் விமானத்தின் உதிரி பாகங்களோ அல்லது விபத்தில் இறந்தவர்களின் உடலோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

குஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்தது

நாடெங்கும் வேகமாக பரவிவரும் பன்றிக் காய்ச்சலுக்கு குஜராத்தில் இன்று மேலும் 8 பேர் பலியானதையடுத்து மாநிலம் முழுவதும் இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. 

எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது. 

சனி, மார்ச் 07, 2015

நியூ யார்க்கில் கடுமையான பனிப்பொழிவு: ஓடுபாதையில் இருந்து விலகி பனிக்குவியலில் பாய்ந்து புதைந்த விமானம்

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரிலிருந்து நியூ இங்கிலாந்து வரையில் கடந்த பல மணி நேரமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனையடுத்து, பல மாகாணங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அட்லாண்டா நகரில் இருந்து வடக்கு நியூ யார்க் நகரில் உள்ள ல குவார்டியா விமான நிலையத்துக்கு உள்ளூர் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் டெல்டா நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்.டி.-88’ ரக விமானம் தரையிறங்க அனுமதி கேட்டு வானத்தில் வட்டமிட்டு சுற்றி வந்தது.

செவ்வாய், மார்ச் 03, 2015

ஜகிர் நாயக்குக்கு சிறப்புக்குரிய பரிசளித்து சவுதி மன்னர் கவுரவித்தார் !!!!

இஸ்லாமிய சொற்பொழிவுகள் மற்றும் பேருரைகளின் மூலம் உலகெங்கிலும் உள்ள அரபு மொழி பேசாத இஸ்லாமியர்களிடையே நன்கு அறிமுகமாகியுள்ள ஜகிர் நாயக் (49), இந்தியாவில் உள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

மும்பையை சேர்ந்த இவர் இஸ்லாமுக்கு ஆற்றியுள்ள தொண்டினையும், சேவையையும் சிறப்பிக்கும் வகையில் சவுதியின் புதிய மன்னர் சல்மான் நேற்று பரிசு வழங்கி கவுரவித்தார்.

கடல் ஆராய்ச்சிக்கான செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் 9-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் வரும் 9-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. 

இதுகுறித்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் எம்.ஒய்.எஸ்.பிரசாத் கூறியதாவது:- 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தொடர்ந்து கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது.

திங்கள், மார்ச் 02, 2015

லஞ்சம் ஊழலுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ

 சென்னையில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி அளித்த பேட்டியில் கூறியதாவது;
சமீப காலங்களில் தினமும் லஞ்ச ஊழல் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடைநிலை ஊழியர் முதல்,  அரசு உயர் அதிகாரிகள் வரை மக்கள் சேவைக்காக லஞ்சம் பெறும் அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து துறை அலுவலகங்கள்,  காவல் நிலையங்கள்,  தாலுகா அலுவலகங்கள்,  கிராம நிர்வாக அலுவகங்கள்  தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

பா.ஜனதாவிடம் முப்திமுகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: குலாம்நபி ஆசாத் எச்சரிக்கை

காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்திமுகமது சயீத் நேற்று முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.