வியாழன், ஏப்ரல் 17, 2014

சிரியாவில் 3 ஊடகவியலாளர்கள் படுகொலை!

சிரியாவில் லெபனான் எல்லையையொட்டிய புராதன கிறிஸ்தவ நகரமான மஃலூலாவில் அரசு படையினருக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 3 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.
லெபனானில் ஹிஸ்புல்லாஹ்வின் கீழ் இயங்கும் ‘அல் மனார்’ என்ற சானலில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அல் மனார் சேனல் ரிப்போர்டர் ஹம்ஸா அல்ஹாஜ் ஹஸன், கேமராமேன் முஹம்மது முன்தஷ், தொழில்நுட்ப வல்லுநர் ஹலீம் அல்வா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளவர்களாவர். சிரியா ராணுவத்தை ஆதரிக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் சானல் பணியாளர்கள் மீது புரட்சிப் படையினர் நடத்திய திட்டமிட்ட தாக்குதலில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக சானல் தொடர்புடையவர்கள் தெரிவித்தனர். புராதன கிறிஸ்தவ நகரமான மஃலூலா மற்றும் அதன் சமீப பிரதேசங்களை புரட்சி படையினர் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தபிறகு தாமதிக்காமல் சிரிய அரசு படை அதனை மீட்டது. எனினும், நகரத்தின் சில பகுதிகள் தற்போதும் புரட்சிப் படையினரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக