ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுகின்றது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கலின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.
வட மாநிலங்களில் நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தல்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் வடக்கு கோட்டா, காமன், பண்டி ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கலின் போது பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்களும், ஆதரவாளர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
வடக்கு கோட்டா சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷபி வேட்புமனு தாக்கல் செய்தார். பெரும்பாலான இளைஞர்களின் நம்பிக்கையை பெற்ற இவர், அந்தப் பகுதியில் நன்கு அறியப்பட்டவர். இவருடைய வேட்புமனு தாக்கலில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்து கொண்டு பேரணி நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் காமன் சட்டமன்ற தொகுதியில் ஹபீஸ் மன்சூர் அலீ கான் போட்டியிடுகிறார். இவருடைய வேட்புமனு தாக்கலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து பாத யாத்திரையாக சென்றனர்.
ஹபீஸ் அலீ கான் அந்த தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். சமூக ஆர்வலர். பல்வேறு சமூக அமைப்புகளில் அங்கம் வகித்து, பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வருபவர்.
இதற்கு முன்பு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் எஸ்.ஐ.ஓ.வில் தீவிர உறுப்பினராக இருந்தவர். தற்பொழுது ஜம்இய்யத் உலமா இ ஹிந்தின் ராஜஸ்தான் மாநில செயலாளராக இருக்கிறார். எஸ்.டி.பி.ஐ.யில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஆதரவாளராக இருந்து, தற்பொழுது கட்சியில் தேசிய செயலாளராக செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டி சட்டமன்ற தொகுதியில் பேட்டியிடும் மொய்னுதீன் சாஹர் சமூக ஆர்வலர். இவருடைய வேட்புமனு தாக்கலின் போது அதிகமான இளைஞர்கள் உட்பட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நீண்ட பேரணியாக சென்று இவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
all the best sdpi
பதிலளிநீக்கு