வியாழன், நவம்பர் 28, 2013
புதன், நவம்பர் 27, 2013
செவ்வாய், நவம்பர் 26, 2013
தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்..
தாய்லாந்து பிரதமராக யிங்லக் ஷினாவத்ரா பதவி வகிக்கிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரது அண்ணன் தக்ஷின் ஷினாவத்ரா ராணுவ ஆட்சி கவிழ்ப்பினால் பதவி இழந்தார்.
தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்க தற்போது அவர் வெளிநாட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் நாடு திரும்ப வழி வகுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மன்னிப்பு மசோதாவை யிங்லக் ஷினாவத்ரா கொண்டு வந்தார்.
அமெரிக்க தாக்குதல்: கண்டுகொள்ளாமல் விட்ட பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது வழக்கு..
பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதல் போர்க்குற்றம் என்று கடந்த மே மாதம் பெஷாவர் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்த தாக்குதலுக்குப் பிறகும் பழங்குடியினர் பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தவில்லை.
ஆப்கானை நிரந்தரமாக ஆக்கிரமிக்க அமெரிக்கா திட்டம்..
2014-ம் ஆண்டு நேட்டோ படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்திருந்த அமெரிக்கா, 2014-க்குப் பிறகு 2024 வரையிலும் அதற்கும் பின்னரும் 15,000 அன்னிய துருப்புகளை (அமெரிக்க படையினர் என்று அர்த்தம்) ஆப்கானிஸ்தானில் நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஆப்கன் அரசு மீது சுமத்தியிருக்கிறது. 8 மாகாணங்களில் உள்ள 9 முக்கிய இராணுவத் தளங்கள் அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும்.
ஞாயிறு, நவம்பர் 24, 2013
சனி, நவம்பர் 16, 2013
கதிரியக்க விஷம் வைத்து கொல்லப்பட்ட பாலஸ்தீன அதிபர்...
அரசியல் எதிரிகளை கொலை செய்வது, மக்கள் மீது குண்டு வீசுவது, குழந்தைகளுக்கு மருந்துகள் மறுப்பது போன்ற பயங்கரவாத செயல்களில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் நாடுகள் அமெரிக்காவும், அதன் கூட்டாளி இஸ்ரேலும். அதன் சமீபத்திய சான்றாக பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராஃபத் 2004-ம் ஆண்டு கதிரியக்க நச்சின் மூலம் படுகொலை செய்யப்பட்டிருப்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.
பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 1948-ம் ஆண்டு உருவாக்கிய யூதர்களுக்கான இஸ்ரேல் நாடு தொடர்ந்து தனது ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தி, லட்சக் கணக்கான பாலஸ்தீன மக்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக, சிறைக் கைதிகளாக நடத்தி வருகிறது. 35 ஆண்டுகளாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் அதற்கு பின்பலமான அமெரிக்காவையும் எதிர்த்து போராடிய பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவரான யாசர் அராஃபத் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் சின்னமாக இருந்தவர்.
வெள்ளி, நவம்பர் 15, 2013
வியாழன், நவம்பர் 14, 2013
ராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ. வேட்புமனு தாக்கல்! ஆயிரக்கணக்கானோர் மாபெரும் பேரணி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுகின்றது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கலின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.
புதன், நவம்பர் 13, 2013
முஸ்லிம் சமூகத்தின் பெயரால் அ.தி.மு.க. இணையதளம் முடக்கம்! தீவிர விசாரணை தேவை!! பாப்புலர் ப்ரண்ட் வேண்டுகோள்!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது ரசீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க. அரசின் இணையதளம் கடந்த நவம்பர் 1ம் தேதி விஷமி ஒருவரால் இஸ்லாத்தின் பெயரால் முடக்கப்பட்டது. இணையதளத்தை முடக்கியவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். நேர்மையான விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளியை கைது செய்துள்ள காவல்துறை பாராட்டுக்குரியது.
செவ்வாய், நவம்பர் 12, 2013
பாட்னா குண்டு வெடிப்பு : 5 'ஹிந்துத்துவா' பயங்கரவாதிகள் கைது!
1.கோபால், 2.கணேஷ், 3.பவன், 4.விசால், 5.ராஜு
"ஊமை'யாகிப் போன ஊடகங்கள்"
நரேந்திர மோடியின் ஏற்பாட்டின் பேரில், பெரும் செலவில் கூலிக்கு ஆள் அமர்த்தி 'பாட்னா'வில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் தான் என, தற்போது தெரிய வந்துள்ளது.
பாட்னாவிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் 'லக்கி சராய்' என்ற இடத்தில் வைத்து, தேசிய புலனாய்வு (NIA)அமைப்பினரால், சனிக்கிழமையன்று (09/11) கைது செய்யபபட்ட இவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.
ஞாயிறு, நவம்பர் 10, 2013
சத்தீஷ்கர்: BJP எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண் எரித்துக் கொலை...
சத்தீஷ்கர் மாநிலத்தில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி பாந்தி. இவரிடம் ஆர்.ஆர். பரத்வாஜ் என்பவர் உதவியாளராக இருந்தார். பின்னர் அவர் நீதிபதியாகி ஓய்வு பெற்றார்.
கிருஷ்ணமூர்த்தி பாந்தி தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். நாளை நடைபெறும் தேர்தலில் மஸ்தூரி தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.
குஜராத் போலி என்கவுன்ட்டர்: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரிடம் சிபிஐ விசாரணை...
குஜராத் போலி என்கவுன்ட்டர் வழக்கில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 2003ஆம் ஆண்டு ஜனவரியில் சாதிக் ஜமால் மெக்தர் என்பவர் போலீசாரால் தீவிரவாதி எனக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது ஐபியில் இணை இயக்குநராக பணிபுரிந்தார் நெஹ்சல் சாந்து. தற்போது தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பதவி வகித்து வருகிறார்.
சனி, நவம்பர் 09, 2013
யுனெஸ்கோவில் வாக்குரிமையை இழந்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா!
ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் வாக்களிக்கும் உரிமையை அமெரிக்காவும், இஸ்ரேலும் இழந்துள்ளன. கடந்த 2011-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை யுனெஸ்கோ அமைப்பு உறுப்பினராக இணைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்த அமைப்புக்கு அளித்துவந்த நிதியுதவியை நிறுத்தின. இதன் காரணமாக, கடும் நிதிச்சுமையில் சிக்கித் தவித்த யுனெஸ்கோ அமைப்பில், பலர் வேலை இழந்தனர்.
யாசர் அராபத்தின் படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல்?
பாலஸ்தீனிய விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி தனது 75-வது வயதில், பிரான்ஸ் நாட்டில் இறந்தார். ஆனால், அவரது உடல் அப்போது பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தீவிரவாத அமைப்பு இல்லை! -மத்திய உளவுத்துறை அறிவிப்பு!
மதுரையில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நாட்டில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது. சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை முன்னிட்டு, அந்த மாநில வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கியது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பத்திரிக்கைகள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை தீவிரவாத அமைப்பாக சித்தரித்து செய்திகள் வெளியிடப்பட்டன.
வெள்ளி, நவம்பர் 08, 2013
32-வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி (SIBF-2013) துவக்கம்! மூன்றாம் ஆண்டாக இலக்கியச்சோலை, புதுயுகம் நூல்கள் பங்கேற்பு!
53 நாடுகள், 1010 பதிப்பகங்கள், 4,05,000 புத்தகங்கள், 180 மொழிகளில் பங்கு பெறுகின்றன! அப்துல் கலாம், கமல் ஹாசன் பங்கேற்பு!!
ஷார்ஜா: 32-வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி (Sharjah International Book Fair – SIBF 2013) நவம்பர் 6-ம் தேதி ஷார்ஜாவில் துவங்குகிறது. நவம்பர் 6 முதல் நவம்பர் 16 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மூன்றாம் ஆண்டாக இலக்கியச்சோலை தமிழ் நூல்களும், புதுயுகம் பதிப்பகத்தின் தமிழ் நூல்களும் பங்கேற்கின்றன.
வியாழன், நவம்பர் 07, 2013
மத்திய பிரதேச மாநிலத்தில் தீவிரமாக நடைபெறும் முஸ்லிம் வேட்டை!
புதுடெல்லி: மத்தியபிரதேச போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை அதிகமாக தீவிரவாத வழக்குகளில் கைதுச் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 12 ஆண்டுகளில் 85 வழக்குகளில் 200 பேர் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்(யு.ஏ.பி.ஏ) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன்(ஜெ.டி.எஸ்.எ) தயாரித்துள்ள ‘கில்டி பை அசோசியேசன்:யு.ஏ.பி.ஏ கேஸஸ் ஃப்ரம் மத்தியபிரதேஸ்’ என்ற அறிக்கைகூறுகிறது.
இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கா? ராஜபக்சேவா?
வங்கக்கடலில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் தாக்குவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் 13 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
புதன், நவம்பர் 06, 2013
திங்கள், நவம்பர் 04, 2013
முஹர்ரம் எமது வாழ்வில் புத்தாக்கம் செலுத்திட ....!
இன்று யூத கிறிஸ்தவர்கள் தமது புதுவருடத்தின் ஆரம்ப மாதமாக ஜனவரி மாதத்தை அடிப்படையாக கொண்டு உலகினது அனைத்து விவகாரங்களையும் குறிப்பிடும் “கலன்டரை” கொண்டிருப்பதாலும் அது இன்றைய முதலாளித்துவ அரசினால் அமுல்படுத்தப்படுவதாலும் முஸ்லிம்களாகிய நாம் “எமது வருடக் கணிப்பாகிய முஹர்ரத்தை” எமது “புதுவருடமாக கணித்து” வாழ்வினது விவகாரங்களை ஒழுங்குபடுத்த தவறிவிடுவதுடன் அதுபற்றிய எத்தகைய எண்ணமும் முக்கியத்துவமும் எமது இளம் சந்ததிகளிடம் இல்லாமல் இருப்பதனை காணமுடிகிறது.
ஞாயிறு, நவம்பர் 03, 2013
வெள்ளி, நவம்பர் 01, 2013
தனியார் பேருந்துகளை உரிய முறையில் கண்காணிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில்: தனியார் சொகுசு பேருந்துகளின் சேவை வேகமாக அதிகரித்து வருகின்றன. அரசு விரைவு பேருந்துகளில் சுத்தம், பராமரிப்பு இல்லாததாலும் போதிய அளவு எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படாததாலும், தனியார் பேருந்துகளை போன்ற வசதிகளும்,சொகுசும் அவற்றில் இல்லாததாலும், அரசு பேருந்துகளின் கட்டணம் குறைவாக இருந்தாலும் மக்கள் தனியார் பேருந்துகளை நாடும் சூழல் உருவாகியுள்ளது.
ஜனநாயகவாதிகளை ஆதரித்த எகிப்து குங்ஃபூ வீரரின் பதக்கம் பறிப்பு!
எகிப்தின் ஜனநாயக போராட்டத்தை ஆதரிக்கும் ராபிஆ சின்னம் பொறித்த டீசர்ட் அணிந்த எகிப்தின் குங்ஃபூ வீரருக்கு கிடைத்த தங்கப் பதக்கத்தை சர்வாதிகார ராணுவ அரசு பறித்துள்ளது. ரஷ்யாவில் நடந்த குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டியில், எகிப்தின் ஜனநாயக போராட்டத்தை ஆதரிக்கும் ராபிஆ சின்னம் பொறித்த டீ சர்ட்டை அணிந்து அதன் மீது தங்கப்பதக்கத்தை அணிந்திருந்த குங்ஃபூ வீரர் முஹம்மது யூசுஃபிற்கு கிடைத்த பதக்கத்தை தான் சர்வாதிகார ராணுவ அரசு பறித்துள்ளது.
குளிர்பானங்கள் நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது! ஆய்வில் தகவல்!
மனித வாழ்க்கையில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட குளிர்பானங்கள் (Soft Drinks) நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலுக்கு அதிகமான அளவில் சர்க்கரை கிடைப்பது குளிர்பானங்கள் மூலமாகும். இக்காரியத்தில் ஐஸ்க்ரீம், மிட்டாய்களை குளிர்பானங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. க்ரெடிட் நியூஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் நடத்திய ஆய்வு இதனை தெரிவிக்கிறது.
ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் அமைய பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய பிரச்சாரம் துவக்கம்!
பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு கூட்டம் அக் 30 அன்று சென்னையில் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இக்கூட்டத்தில் பொது செயலாளர் ஏ.காலித் முஹம்மது, செயலாளர்கள் ஜே.முஹம்மது ரசீன் மற்றும் எஸ்.இலியாஸ், பொருளாளர் ஆரிஃப் பைசல் மற்றும் பிற செயற் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய எந்த தகவல்களையும் ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள வில்லை என தேசிய புலனாய்வு அமைப்புகளான IB மற்றும் NIA மறுப்பு!
பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு தீவிரவாத
இயக்கம் என சித்தரித்து எந்த தகவல்களையும், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள வில்லை
என்று புலனாய்வு அமைப்புகளான IB (Intelligence Bureau)மற்றும்
NIA (NationalInvestigation Agency)
மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரஸ் கவுன்சில் (Press Council of India - PCI)
அனுப்பிய நோட்டிசுக்கு பதில் அளித்துள்ள புலனாய்வு அமைப்புகள், பாப்புலர் ஃப்ரண்டை
தீவிரவாத இயக்கமென சில பத்திரிக்கைகள் கூறுவது போல் எந்த ஒரு தகவலும் தங்களிடம்
இல்லை என பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)