புதுடெல்லி: சர்ச்சை சாமியார் ஆஸ்ரம் பாபு, அவருக்கு விருப்பமான பெண்களை தேர்வு செய்ய பெண்கள் மீது பழங்களை வீசுவார் என்று அவரது உதவியாளர் கூறியுள்ளார்.
ஆஸ்ரம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கிப் படித்த 16 வயது சிறுமியிடம் தவறாக நடந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆஸ்ரம் பாபு சாமியார் குறித்து அவரது உதவியாளர் சாவ்லா பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது, ஆஸ்ரம் பாபு தனக்கு பிடித்த பெண்கள் மீது பழம் அல்லது பிரசாதத்தை வீசி. அல்லது அந்த பெண் மீது டார்ச் லைட்டை அடித்து தேர்வு செய்துள்ளார். மேலும் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் அவரால் ஓபியம் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தான் அவருக்கு ஓபியம் சப்ளை செய்து வந்துள்ளார்.
மேலும், ஆஸ்ராம் பாபுவின் மகன் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி வருகிறார். ஆனால் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதாக சாவ்லா தெரிவித்துள்ளார்.

 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக