ஐ.நா பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இச்சபையில் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் உட்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளனர். இவைகள் 2
ஆண்டுகளுக்கு மட்டுமே அப்பதவியில் இருக்கும்.
ஆண்டுகளுக்கு மட்டுமே அப்பதவியில் இருக்கும்.
இந்நிலையில் ஐ.நா சபையின் தலைமை பதவி சுழற்சி முறையில் உறுப்பினர் நாடுகளுக்கு வழங்கப்படும்.
அந்த வகையில் ஜனவரி மாதத்துக்கான தலைமை பதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மசூத் கான் கூறுகையில், தலைமைப் பதவியில் திறம்பட செயல்படுவோம்.
முக்கிய பிரச்னைகள் தொடர்பாக உறுப்பினர்களிடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி எடுப்போம்.
பயங்கரவாதம் தொடர்பாக சிறப்பு விவாதக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். விரிவான நடவடிக்கை, பேச்சுவார்த்தை, மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றின் மூலம்தான் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக