செவ்வாய், ஜனவரி 01, 2013

சிவகாசி ஜெயலட்சுமி விடுதலை !

மதுரை: சிவகாசி ஜெயலட்சுமி மீது நிலுவையில் இருந்த கடைசி 4 வழக்குகளிலும் குற்றவாளி என்று மதுரை கோர்ட் தீர்ப்பளித்து அவருக்கு 11 மா சிறைத் தண்டனையும், ரூ. 2500 அபராதமும் விதித்தது. ஆனால் ஏற்கனவே அவர் சிறைவாசம் அனுபவித்திருந்ததால், அபராதம் மட்டும் செலுத்தி விட்டு சந்தோஷமாக கிளம்பிப் போனார் ஜெயலட்சுமி. ஏட்டு முதல் எஸ்பி வரை 8 காவல்துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலட்சுமி. போலீஸ் வேடத்தில் போய் காவல்துறையினர் பலரையும் மோசடி செய்தது, நகை மோசடி உள்பட பல வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. இந்த வழக்குகளிலிருந்து அவர் படிப்படியாக விடுதலையாகி வந்தார். இந்த நிலையில் அவர் மீது நிலுவையில் இருந்து வந்த கடைசி நான்கு வழக்குகளிலும் இன்று மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி நான்கு வழக்குகளிலும் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்த கோர்ட், அவருக்கு 11 மாத சிறைத் தண்டனை விதித்தது. இருப்பினும் ஜெயலட்சுமி ஏற்கனவே ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்து விட்டதால் அவரை விடுவிக்க கோர்ட் உத்தரவிட்டது. அதேசமயம், அவர் ரூ. 2500 அபராதம் கட்ட உத்தரவிடப்பட்டது. அவரும் அபராதத்தைக் கட்டி நிம்மதியாக கிளம்பிச் சென்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக