செவ்வாய், ஜூலை 22, 2014

17 வயது இளம்பெண்ணை பறி கொடுத்த தந்தை ரஷிய அதிபர் புதினுக்கு எழுதிய கடிதம்

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான  MH 17 ரக பயணிகள் விமானம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற போது நடத்தப்பட்ட தீவிரவா  தாக்குதலில் விமானத்தில் இருந்த 298 பயணிகளும் உடல் கருகி பலியாகினர். 
அந்த விமானத்தை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்ட ‘புக்’ ரக பீரங்கியை உக்ரைன் தீவிரவாதிகளுக்கு ரஷியா தான் வழங்கியது. எனவே, இந்த தாக்குதலுக்கு ரஷியா தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தொடர்ந்து கூறி வருகிறார். 

பலியானவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள். இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் தனது ஒரே மகளான 17 வயது இளம்பெண்ணை பறி கொடுத்த ஆசை தந்தை, அன்பு மகளை இழந்த சோகத்தை ஆற்றிக் கொள்ள வழி தெரியாமல் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். 

‘பேஸ்புக்’ மூலம் இந்த திறந்த மடலை எழுதியுள்ள எல்ஸ்மிர்க் டி போஸ்ட் என்ற பலியான பெண்ணின் தந்தையான ஹன்ஸ் டி போர்ஸ்ட் ‘திருவாளர் புதின் அவர்களே.., உக்ரைன் பிரிவினைவாத 
தீவிரவாதிளே.., அடையாளம் தெரியாத வேற்று மண்ணின் மீது பறந்துக் கொண்டிருந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் எனது ஒரே மகளை என்னிடம் இருந்து பறித்துக் கொண்டதற்கு மிக்க நன்றி.

பள்ளிக் கல்வியை முடித்து விட்டு எஞ்சினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படித்து, பெரிய ஆளாக வர வேண்டும் என்று கனவு கண்ட அவளை சுட்டு வீழ்த்திய பெருமிதத்துடன் நிலைக் கண்ணாடியில் உங்கள் உருவத்தை பார்த்து பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். 

திரு. புதின் அவர்களே.., எங்கள் நாட்டு பிரதமருடன் நீங்கள் பேசிய போது அளித்த வாக்குறுதியின்படி, விமானம் நொறுங்கி வீழ்ந்த இடத்தில் ரஷ்ய படையினரை காவலுக்கு போட்டு, டச்சு நாட்டு புலனாய்வு அமைப்பினரின் நியாயமான விசாரணைக்கு நீங்கள் உதவி செய்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்’ என்று வெளிப்படையாக கூறியுள்ளார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக