முன்னாள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி புர்ஹானுத்தீன் ரப்பானி நேற்று (20.09.2011) இரவு கொலை செய்யப்பட்டார்.
தற்கொலை குண்டுதாரியால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் அவருடைய மெய்க்காப்பாளர்கள் நால்வரும் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொரு உதவியாளர் படுகாயம் அடைந்துள்ளார். தனது தலைப்பாகையில் குண்டை மறைத்து வைத்திருந்த நபர் ரப்பானியின் வீட்டுக்குள் நுழைந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.ஆப்கான் அரசாங்கம் தலிபான் அமைப்பினருடன் பேசுவதற்காக அமைத்துள்ள அமைதிக்குழுவின் தலைவராக ரப்பானி செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கர்ஷாய் தனது அமெரிக்கப்பயணத்தை பாதியி்ல் முடித்துவிட்டு நாடு திரும்புகிறார். அமைதிக்கான பாதையிலிருந்து இவ்வாறான தீவிரவாத தாக்குதல்களினால் ஆப்கான் மாறிவிடாது என அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு தனது நண்பராக செயல்பட்டு வந்த ரப்பானி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த படுகொலையைக் கண்டித்துள்ளார். ரப்பானி, தலிபான் ஆட்சி அமைப்பதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக